உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 6.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252

மறைமலையம் 6

ஒற்றுமையும், அதனாற் பெருகிய பேராற்றலும் நெடுங்காலம் வாய்க்கப் பெற்றிருந்தனர் என்பதேயாம். தமது அரசு வேற்றரசரால் வௌவப்பட்டு நிலைகுலைந்தழியும் எனக் கனவினும் அவர் நினைந்திலர். அதனாற் பல மாறுதல் கட்கிடையிலும் நிலைத்து நிற்க வல்ல கற்பட்டயங்களை வெட்டுவித்திலர். இரண்டாவது, பண்டைக்காலந் தொட்டே தமிழ் வேந்தர் மூவரும் செந்தமிழ்ப் பயிற்சியைப் பெரிதும் வளரச் செய்து, இங்ஙனம் கொடை கொடுத்தலும் இயலுமோ வெனக் கேட்டார் ஐயுற்று வியக்குமாறு தமிழ் கற்றார்க்கு மிகப் பெரிய பொருளுதவி செய்து தமிழையுந் தமிழரையும் நிரம்பவும் செழிப்புறப் பெருக்கிக் குடிகள் உவக்குமாறு செங்கோல் செலுத்தி வந்தமையேயாம். இதனாற் கற்றார் தாகையும், அவரியற்றிய அளவிலா நூல்களும் பதிற்றுப்பத்து முதலியவற்றைப் போல் அவ் வேந்தர்தம் பெயரும் பீடும் உரைத்து அவற்றை மங்காமற் றுலங்க வைத்தமையாலும் அவர் கல்வெட்டுக்கள் ஆக்கிவைக்கும் கருத்தே இலராயினார்” (பக்.

240-241)

இலக்கிய வரலாற்றுக்குத் துணைசெய்யும் ஆசிரியர்தம் யாப்பறிவு

இனி மாணிக்கவாசகர் காலத்தைப் பிற்பட்டதெனக் கூறுவோர், அவருடைய திருவாசகம், திருக்கோவையாரில் காணப்படும் பாவைகளைப் பிற்பட்ட காலத்ததுவெனக் கூறுவர். பாவகைகளை ஆய்வு செய்து, அவ்வகையிலும் மாணிக்க வாசகர் காலம் முற்பட்ட தன்பதைத் தெளிவுபடுத்திக் காட்டுகிறார் ஆசிரியர். “கி.பி. இரண்டாம் நூற்றாண்டிற்கு முற்பட்ட செந்தமிழ் நூல்கள் எல்லாம் பண்டைத் தமிழ்ப் பாக்களாலும் பாவினங்களாலுமே ஆக்கப்பட்டிருப்ப, கி.பி. ஆறாம் நூற்றாண்டிற்குப் பிற்பட்ட தமிழ் நூல்களெல்லாம் புதிது புகுந்த விருத்தப் பாக்களாலேயே ஆக்கப்பட்டிருப்பத், 'திருவாசகமோ' ஒன்றரைப் பங்கு பண்டைத் தமிழ்ப்பா பாவினங்களாலும் ஒருபங்கு புதிது தோன்றிய விருத்தப் பாக்களாலும் ஆக்கப்பட்டிருத்தலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_6.pdf/283&oldid=1577767" இலிருந்து மீள்விக்கப்பட்டது