6
- பின்னிணைப்பு
253
நுனித்துக் காண வல்லார்க்குப் பண்டைத் தமிழ் வழக்குச் சிறிது சிறிது வீழ்ந்து, புதிய கலவை வழக்கு மெல்ல மெல்லத் தோன்றும் ஒரு காலத்தே திருவாசக நூல் இயற்றப்பட்டதாதல் நன்கு விளங்கும். இத் திருவாசகத்தைப்போற் பழைய வழக்கும் புதிய வழக்கும் ஒருங்கு விரவிய பிறிதொரு தமிழ் நூலைக் காண்டல் அரிது. அங்ஙனம் விரவிய வழக்கினுள்ளும் பழைய வழக்கையே அது பெரிதுஞ் சார்ந்து நிற்கக் காண்டலிற், புதிய வழக்குக்குத் தோற்றுவாய் காட்டும் சிலப்பதிகாரத்தின் காலத்தை நெருங்க அடுத்தே திருவாசகம், திருக்கோவையார் க என்னும் நூல்கள் தோன்றியவாதல் தெளியப்படும். (பக். 214 -
215)
பாவாராய்ச்சியால் காலத்தை அறுதியிட்ட ஆசிரியர், பா பயிலும் வடசொற் கலப்பின் துணைக்கொண்டும் காலத்தைக் கணித்தல் போற்றுதற்குரியது. பத்தாம் நூற்றாண்டளவில் நூற்றுக்கு முப்பது, நாற்பது, ஐம்பது, அறுபது வரையில் வட சொற்கள் கலந்துவிட்டமையை எடுத்துக்காட்டி, திருவாசகத் திருக்கோவையாரில் அவை குறைந்த அளவில் இருப்பதைக் காட்டுகிறார். “திருவாசகம் முழுதும் உள்ள சொற்களை எண்ணிப் பார்க்க, முதன்மையாயுள்ளன இரண்டாயிரத்து எண்ணூற்றுப் பத்துச் சொற்களேயாம். இவற்றுள் முந்நூற்று எழுபத்து மூன்று வடசொற்கள். இவற்றை வகுத்துப் பார்த்தால் நூறு சொற்களில் தொண்ணூற்றிரண்டு அல்லது மூன்று
தமிழ்ச்சொற்களும் மற்றைய எட்டு அல்லது ஏழு
வடசொற்களுமாய் முடிகின்றன. முடியவே, திருவாசகத்தில் நூற்றுக்கு ஏழு அல்லது எட்டு விழுக்காடு வடசொற்கள் வந்து வ விரவலாயின வென்பது புலப்படும். மாணிக்க வாசகப் பெருமான் அருளிச் செய்த மற்றொரு நூலாகிய 'திருச் சிற்றம்பலக் கோவையாரில்' சமயப் பொருள் மிக விரவாமல், பெரும்பாலும் தமிழின் அகப்பொருளே விரவி நிற்றலால் அதன்கண் நூற்றுக்கு ஐந்து விழுக்காடே வடசொற்கள் கலந்து காணப்படுகின்றன.” (பக். 210-211)
ள
வ்வாறு வடசொற்கள் விரவியிருக்கும் எண்ணிக்கை யாலும் கூட, மணிவாசகரின் நூல்கள் காலத்தால் முந்தியனவே