உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 6.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பின்னிணைப்பு

261

2. தமிழ் - தமிழர்

தமிழர்க்குள்ள பெருமை யெல்லாம் அவர் தொன்று தொட்டுத் தூய்தாக வழங்கி வருந் தமிழ் மொழியினையே சார்ந்திருக்கின்றது.

திருவள்ளுவர் பிறப்பதற்கு முன் ஒரு நானூறு ஆண்டும், அவர் பிறந்த பின் ஒரு நூறு ஆண்டும் சேர்ந்து முடிந்த ஓர் ஐந் நூறாண்டும் தமிழ்மொழி மறுவற்ற மதிபோற் கலைநிரம்பி விளங்கிய காலமாகும். இக்காலத்திலே சிறந்த புலவர் பலர் தோன்றிப் பலவகையான அரிய பெரிய செந்தமிழ் நூல்கள் இயற்றினர்.

சொற்கள் எல்லாவற்றையும் பழந்தமிழ் நூல்களினின்றும் ஆய்ந்து பொறுக்கி எவ்வெவ்ச் சொல் எவ்வெவ்க் காலத்து நூலிற் றோன்றிற் றென்று கணிப்பின் தமிழ் மொழியின் காலம் னிது நாட்டப்படும். ஒரு பொருளைச் சுட்டுதற்குப் பல சொற்கள் காணப்படும். அத்துணையே பற்றித் தமிழ் மிகப் பழைய மொழியா மென்று கூறுதல் குற்றம் ஆமாறில்லை என்க.

தொல்காப்பியர் எல்லாவற்றையும் அறிந்தவர். ஆனால், அவரை அறியாதவர்கள் தமிழ் நாட்டிலே அதிகம். இது தமிழர் களுக்கு ஒரு மானக்கேடு. தம்மிடம் களஞ்சியம் இருக்க, கருவூலம் இருக்கப் பிறரிடம் பிச்சை கேட்கும் இரவலர்களாகத் தமிழர் இருப்பது பெரிதும் வருந்துதற்குரியது.

L

தமிழுக்குப் புறம்பான மொழிகளை ஆராய்ந்து சொல் கிறேன். தமிழுக்குள்ள சிறப்பு வேறு எந்த மொழிக்கும் இல்லை.

யான் தமிழில் எழுதும் ஒவ்வொரு சொல்லையும், சொற் றொடரையும் நீங்கள் செவ்வையாக உன்னித்து வந்தால் தமிழிற் பிழையின்றிப் பேசவும் எழுதவும் ஆற்றல் பெறுவீர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_6.pdf/292&oldid=1577776" இலிருந்து மீள்விக்கப்பட்டது