உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 6.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262

மறைமலையம் 6

உலகம் உள்ளளவும் எமது தமிழ்த் தாண்டு நிலைபெற்றுப் பெரும் பயனும் பெரும் புகழும் விளைவிக்கும்.

தமிழ் இன்ன காலத்திலேதான் தோன்றிய தென்று கட்டுரைத்துச் சொல்லல் இயலாது; பழைய நாளில் இவ் வுலகமெங்கணும் பரவியிருந்த பெருந் தொகையினரான நாகரிக நன் மக்களால் வழங்கப்பட்டது.

தமிழ் எந்தக் காலத்தும் அழியாது. தமிழை அழிப்பதற்கு உறுதி பூணுபவர்கள் தாமாகவே அழிந்து போவார்கள்.

தன்னைப் பெற்ற தாயைக் கொல்லுந் தறுகணன் போலத் தன்னை அறிவு பெற வளர்த்துப் பெருமைப்படுத்திய தமிழைச் சீர்குலைக்கும் போலித் தமிழ்ப் புலவரைப் பின்பற்றி நடவாமல், தமிழை உள்ளன்புடன் ஓம்பித் தூய்தாய் வழங்கும் உண்மைத் தமிழாசிரியர்களைப் பின்பற்றி நடத்தலிற் தமிழ் நன்மாணவர் அனைவருங் கருத்தாயிருத்தல் வேண்டும்.

தமிழ், கற்றவர்கட்கு எல்லாவகையிலும் பொருளுதவி செய்து அவர்களைச் சிறக்க வைத்தால்தான் இந்நாடு முன்னேற்றம் அடையும். இவர்களைச் சிறக்க வையாமல், வேறு துறைகளில் எவ்வளவு செலவு செய்தாலும் இந்நாடு முன்னேற்றம் அடையாது. இதனை எல்லாருங் கருத்திற் பதித்தல் வேண்டும்.

இனி, ஆராய்ச்சி அறிவில் செழித்து வளரும்

இளைஞர்களால் மட்டுமே தழைத்தோங்க வேண்டும்.

நம் நெறியும் தமிழும்

நமது இனிய செந்தமிழை மறப்பதும், பயிற்சி செய்யாமல் விட்டிருப்பதும் நமது உயிரையே நாம் அழிப்பதாய் முடியும்.

பழைய மொழிகளில் தமிழ் ஒன்றைத்தவிர மற்றைய வெல்லாம் இஞ்ஞான்றுள்ள எந்த மக்கட் குழுவினராலும் பேசப்படாமல் இறந்தே போய்விட்டன.

பண்டை நம் ஆசிரியர் நிறுத்திய இலக்கண இலக்கிய வரம்பில் நில்லாது, இத் தமிழ் மக்கட் பிரிவினர் நம் தமிழ்ச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_6.pdf/293&oldid=1577777" இலிருந்து மீள்விக்கப்பட்டது