உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 6.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பின்னிணைப்பு

263

பல

சொற்களைத் தாம் வேண்டியபடி யெல்லாந் திரித்துக் கொண்டு சென்றதல்லாமலும் வடமொழிச் சொற்களையும் வரைதுறை யின்றிச் சேர்த்து வழங்கி வந்தமையாலன்றோ, பண்டு தமிழா யிருந்த ஒரு மொழியே இப்போது மலையாளந் தெலுங்கு, கன்னடம் முதலியன பல மொழிகளாய்ப் பிரிந்து போக, அவற்றை வழங்கும் பழந்தமிழ் மக்களும் வகுப்பினராகப் பிளவுபட்டு, ஒருவர் மொழியினை மற்றவர் அறியாராய்க் குறுகிப் போயதனாலன்றோ, இவரெல்லார்க்குந் தாயகமான தமிழ்மொழிக்கண் உள்ள சீரிய தொல்காப்பியம், திருக்குறள், திருவாசகம், திருக்கோவையார் அவரெல்லாம் அறிய

அரும்பெறல் நூல்களையும் மாட்டாதவராயினர்.

முதலிய

தமிழ்நாட்டை யடுத்துள்ள மேல் நாடுகளில் இப்போது வழங்கும் மலையாள மொழி, இற்றைக்கு முந்நூறாண்டுகளுக்கு முன் முழுதுந் தமிழாகவே யிருந்தது. ஆனால், அத்தமிழ், இத்தமிழ் நாட்டில் வழங்குஞ் செந்தமிழ் மொழியின் சொற்கள் திரிந்த கொச்சைத் தமிழாகும். என்றாலும், அத்திரிபுகளை நீக்கிப் பார்த்தால் மலையாளம் முற்றுந் தமிழ் மொழியாகவே காணப்படுகிறது.

பண்டு ஒரு மொழி பேசிய ஒரு மக்கட் பெருங் கூட்டமா யிருந்த தமிழரே, இப்போது தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், துளுவம், குடகம், கோடம், தோடம், கோண்டம், கொண்டம், ஓரம், இராசமாலம் முதலான பன்மொழி பேசும் பல்வகை மக்கட் பிரிவினர் ஆயினர்.

தமிழ் நெடுங்கணக்கிலுள்ள முப்பது எழுத்துக்களும் முப்பது ஒலிகளுமே மக்களுக்கு இயற்கையாகத் தோன்றக்கூடியவை யென்றும், முப்பது தமிழொலிகளைக் காண்டே உலகத்தி லுள்ள எல்லா மொழிகளின் எல்லா ஒலிகளையும் எளிதில் தெரிவிக்கலா மென்றுங் காலஞ்சென் திரு.பா.வே. மாணிக்க நாயக்கர் அவர்கள் மிகவும் நுட்பமாக ஆராய்ச்சி செய்து நன்கு விளக்கிக் காட்டி யிருக்கவும், அவைகளை ள யெல்லாம் ஆராய்ந்து பாராது தமிழ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_6.pdf/294&oldid=1577778" இலிருந்து மீள்விக்கப்பட்டது