உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 6.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264

மறைமலையம் 6

நடுங்கணக்கைக் குறுக்க வேண்டுமென்றும் பிறமொழிச் சொற்களையும் ஒலிகளையும் தமிழிற் சேர்க்க வேண்டு மென்றும் சொல்வது மிகவும் வருந்தத் தக்கது. குறைபாடில்லாத தமிழ்மொழியைச் சீர்திருத்த வேண்டு மென்று சொல்லும் அவர்கள் குறைபாடு நிரம்பிய ஆங்கிலம் முதலான மொழி களைச் சீர்திருத்த முன்வராததென்னையோ?

6

ப்பொழுதுள்ள 999 மொழிகளிலே சிறந்ததாயும் உயிருடை யதாயும் ஒரு நிலையில் நிலையில் இருப்பது தமிழே. ஆங்கிலத்தை 150 ஆண்டுகளாகச் சீர்திருத்தி வந்தார்கள். 150 ஆண்டுகளுக்கு முன் ஆங்கில மொழி சிறந்ததாயில்லை. க்ஷரவ என்றும் ஞரவ என்றும் சொல்வதைக் கேட்டிருக்கிறீர்கள். எழுதுகிற முறையும் சொல்லுகிற முறையும் இடத்துக்கு இடம் மாறுகிறது. ஊயடஅ என்பதில் ஒலி இல்லை. ஞளலஉாடிட- டிபல என்ற சொல்லை ‘பிஸிகாலஜி' என்று பிரஞ்சு மொழியில் வழங்குகிறார்கள். தமிழிலே அந்தக் குறை இல்லை. எழுதியதை எழுதியவாறே, சொல்லியதைச் சொல்லியவாறே தமிழில் உச்சரிக்கலாம். வடமொழியிலோ பேசும் பொழுதும் எழுதும் பாழுதும் பல குற்றங்கள் காணப்படும்.

தமிழ் நெடுங்கணக்கிலுள்ள எழுத்துக்களைக் குறைக்க வேண்டுமென்றும், அயல் மொழிகளிலுள்ள ஒலிகளைத்

தமிழிற் சேர்த்துக் கொள்ள வேண்டு மென்றும்,

அப்போதுதான் தமிழ் வளர்ச்சியடையு மென்றும் கூறுவர் சிலர். நல்லது; தமிழ்ச் சொற்களிலுந் தமிழ் ஒலியினாலுந் தெரிவிக்கக் கூடாதவை இருப்பினன்றோ அயல்மொழிச் சொற்களையும் ஒலிகளையுஞ் சேர்த்தல் வேண்டும்? உலகத்தில் உள்ள எல்லாப் பொருள் களையும், க எல்லா அறிவு

இயல்களையும் தமிழ்ச் சொற்கள், தமிழ் ஒலிகள் கொண்டே செவ்வையாகத் தெரிவிக்கலாம் என்பது யாம் எல்லாத் துறைகளிலும் புகுந்து எழுதியிருக்கும் நூல்களைச் சிறிது பார்த்தாலுந் தெரிந்து கொள்ளலாம்.

இன்னுந் தமிழரெல்லாருந் தம்மைத் தமிழரென்றே வழங்கக் கடமைப்பட்டிருக்கின்றனர். தம்மை ஆரி ரென் றாவது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_6.pdf/295&oldid=1577779" இலிருந்து மீள்விக்கப்பட்டது