* பின்னிணைப்பு
269
நாவலந் தீவின்கணுள்ள நன்மக்கள் இறைவன் திருவுருவத் திருமேனியிற் செய்து போதரும் வழிபாடு அருளுருவ வழிபாடா வதன்றி ‘விக்கிரகவாராதனையாதல்' ஒரு சிறிதுஞ் செல்லாதா மென்பதூஉம், திருவுருவத்தின்கட் செய்யும் வழிபாடுபற்றி இறைவனது முழுமுதற் பரப்பாம் இறைமைத் தன்மைக்கு வரக்கடவதோரிழுக்கில்லை யென்பதூஉம், அருவமாக இறைவன் நினைக்க வல்லே மென்பாருரை மக்கள் மன வியற்கைக்குத் தினைத்துணையுமியைதல் செல்லாமையால் அது வெறுஞ் சொல்லளவாகவே முடிவதல்லது பொரு ணிறைந்த தாகா தென்பதூஉம், உலகத்திற்கண் நாகரிகமில்லாத மக்களுள்ளும் உருவ வழிபாடே காணக் கிடத்தலின் அவ் வியற்கைக்கு வேறாக மொழிதல் முரண்பாடாமென்பதூஉம், வடமொழி நூல்களினும் அருளுருவ வழிபாடே காணப் படுதலின் அதனொடு திறம்பி யுரைப்பாருரை வழுக்குரையா மென்பதூஉங் காட்டப்பட்டன வென்க.
சிவபிரானும் திருமாலும் பண்டுதொட்டு தமிழ் முது மக்களால் வணங்கப்பட்டு வந்த தமிழ்த் தெய்வங்களாகும்.
எல்லாம் வல்ல முழுமுதற் கடவுளே தந்தை வடிவில் சிவபிரான் எனவும், தாய்வடிவில் திருமால் எனவும் வைத்து வணங்கப்பட்டது.
க
நம் ஆசிரியர்கள் தமது காலத்திலிருந்த பொது மக்களின் மனச் சார்பை அறிந்து அவர்கள் பொருட்டுத் தழுவிப் பாடியிருக்கும் புராணக் கதைகளை யெல்லாம் நாம் அப்படியே தழுவ வேண்டு மென்பது கட்டாயமாகாது. ஏனென்றால் அப்பனை வணங்கும் நமது சைவ சமயமும், அம்மையை வணங்கும் வைணவ சமயமும் இக்கதைகளைச் சார்ந்து பிழைப்பன அல்ல. இக் கதைகளின் உதவி வேண்டாமலே இவ்விரு சமயங்களும், மக்களின் இம்மை மறுமை வாழ்க்கைக்கு இன்றியமையாதனவாகிய அரிய பெரிய மெய்ப்பொருள் களினாலேயே அமைக்கப்பட்டிருக்கின்றன. ஆதலால், நம்முடைய சமயங்களின் உண்மைகளைச் ‘சிவஞான போதம்' சிவஞான சித்தியார்' என்னும் உயர்ந்த அறிவு நூல்களில்