* பின்னிணைப்பு
287
அடிப்படைக் கொள்கைகள்
மக்கள் முதன் முதலில் தோன்றிய காலத்தில் பேசப்பட்ட மொழி தமிழே.
தமிழ் மொழியே வடமொழியினும், உலக மொழிகளினும் மாண்புடையது. தமிழ்மொழிதான் இலக்கண வரம்புடைய செம்மையுடையது.
தமிழர் நாகரிகம் ஆரிய நாகரிகத்தினும் முந்தியதும் மேம்பட்டதுமாகும்.
சாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு முதலிய சீர்திருத்தங்களைப் போற்றியது.
சாதி வேறுபாடு, சமய வேறுபாடு இன வேறுபாடு கருதாமல் பழக வேண்டுமென அறிவுறுத்தியது.
பிறப்பால் உயர்வு தாழ்வு கூறுவது தவறு எனச் சுட்டிக் காட்டியது.
தனித்தமிழ் இயக்கங் கண்டது.
தமிழர்களைச் ‘சூத்திரர்கள்' எனக் கூறியதைக் கண்டித்து
ஒழித்தது.
தமிழர் மதம் சிவநெறியும் திருமால்நெறியுமே என ஆராய்ந்து காட்டியது.
‘சைவத்தின் மேற்சமயம் வேறில்லை, அதிற்சார் சிவமாம் தெய்வத்தின் மேல் தெய்வம் வேறில்லை' என்பதை விளக்கிய து.
மூவர் அருளிய தேவாரங்களைப் பயிலுமாறு வற்புறுத்தியது. திருக் கோயில்களிலும், இல்லச் சடங்குகளிலும் தமிழ் மந்திரங்களை ஓத வேண்டு மென்றது.