288
மறைமலையம் -6
திருவள்ளுவர் ஆண்டு கண்டது
திருக்குறளைப் பயிலுமாறு வற்புறுத்தியது.
திருவள்ளுவர்
பலி விலக்கு, ஊன் விலக்கு, கள் விலக்குகளை வற்புறுத்தியது.
நோயின்றி வாழும் முறைகளை விளக்கியது.
நாடோறும் இல்லத்தில் வழிபாடு செய்யும் முறையினை வகுத்துக் காட்டியது.
போலி நூல்கள் எழுதிப் பொருளீட்ட விரும்பாதது.
போலித் தொல்கதைகள் (புராணங்கள்) இவையெனச் சுட்டி காட்டிக் கருத்தமைந்த நல்ல தொல்கதைகள் சிலவற்றைத் தழுவிக் கொண்டது.
அரிய நூல்கள் பலவற்றைத் தொகுத்து நூலகம் அமைக்க வழிகாட்டியது.
சொற்பொழிவாளர்கட்குக்
கைம்மாறு கொடுப்பது
முறையாகும் என்பதற்கு வழிகாட்டியது.
புலவர்களின் மதிப்பை உயர்த்தியது.
தனக்கென வாழாது பிறர்க்கென வாழ்தற்கு வழிகாட்டியது. திருக்கோவில்கட்குச் சென்று வழிபாடு செய்தல், தேவாரம், திருவாசகங்களைப் பண்ணோடு பாடுதல் உய்திபெறுதற்கு வழியாகும் எனக் காட்டியது.
திருமணச் சடங்கினைத் தமிழ் மந்திரம் ஓதித் தாமே நடாத்திக் காட்டியது.
இறையுண்மை, இறைவழிபாடு, திருக்கோயில் வழிபாடு ஆகியவை பகுத்தறிவுக்கும் அறிவியலுக்கும் பொருத்தமானதே என்பதை இறை மறுப்பாளரும் ஏற்கும் வண்ணம் பல நூல்கள் எழுதி நிலைநாட்டியது.
வ. சுப்பையா,
சை. சி. நூற்பதிப்புக் கழகம், சென்னை - 1.