சாகுந்தல நாடகம்
13
கடுஞ் செலவினைக் குறைத்திருக்கின்றேன்; அதனாலேதான் மான் அவ்வளவு தொலைவிற் போய்விட்டது. இப்போது நிலம் மட்டமாயிருத்தலால் அதனைப் பிடிப்பது உங்களுக்கு இனி வருத்தமாய் இராது.
அரசன் : அங்ஙனமாயின் கடிவாளத்தைத் தளர்த்திவிடு.
தேர்ப்பாகன் : நீடு வாழ்வீர் கட்டளைப்படியே (தேரினை மிகமுடுகி) நீடு வாழ்வீர் பாரும்! பாரும்! கடிவாளந் தளர்த்தப்பட்டமையாற் குதிரைகள் மானின் விரைந்த செலவைக் கண்டு பொறாதனபோல், தம் உடம்பின் முற்பாகத்தை முழுதும் நீட்டி, நெற்றிச் சூட்டிய கவரி அசையாமற் காதுகளை நேர்பட நிறுத்திக்கொண்டு, தங்குளம்பினால் எழுப்பிய புழுதிப்படலமுந் தம்மேற் படாமற் பாய்ந்து ஓடுகின்றன.
அ
அரசன் : நங் குதிரைகள் உண்மையாகவே கதிரவன் இந்திரன் என்னும் இருவருடைய குதிரைகளையும் விரைவினால் வென்றுவிட்டன; ஏனெனின், தேரின் விரைந்த ஓட்டத்தினால் முன்னே சிறுத்துத்தோன்றிய பொருள்கள் சடுதியிற் பெருத்துத் தோன்றுகின்றன; இடையே இரண்டு பிளவாய் இருப்பனவெல்லாம் ஒருங்கு பொருந்தி ஒன்றாய்த் தோன்று கின்றன; இயற்கையிற் கோணலாய் இருப்பனவுங் கூட என் கண்களுக்கு நேராகத் தோன்றுகின்றன; எதுவும் எனக்குத் தொலைவில் இருப்பதாகவுந் தோன்றவில்லை; எதுவும் ஒரு நொடியிலேனும் அருகாமையில் இருப்பதாகவுந் தோன்ற வில்லை; பாகனே! இதோ அது கொல்லப் படுதலைப் பார்!
(கணையைக் குறிவைத்துத் தொடுகின்றான்)
திரைக்குப் பின்னே ஓ அரசனே! அந்த மான் வ்வாசிரமத்திற்கு உரியது, அது கொல்லப்படுதல் ஆகாது, கால்லப்படுதலாகாது!
தேர்ப்பாகன் : (உற்றுக் கேட்டு - நோக்கி) நீடுவாழ்வீர்! உம்முடைய கணைக்கு அந்த மான் இலக்காய் அகப்படும் பொழுதில் நுமக்கும் அதற்கும் இடையே துறவிகள் சிலர் வருகின்றனர்.