உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 6.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

மறைமலையம் 6

அரசன் : (விரைந்து) உடனே கடிவாளத்தை இழுத்துப் பிடி பிடி.

தேர்ப்பாகன் : அப்படியே (தேரை நிறுத்துகின்றான்.) ஒரு துறவி தம் இரண்டு மாணவருடன் புகுகின்றார்.

துறவி : (தம் கையை உயர எடுத்து) ஓ அரசனே! அரசனே! இந்த மான் இத் துறவாசிரமத்திற்கு உரியது; அது கொலை யுண்ணலாகாது. ஆகாது! மலர்க் குவியலிற்படும் நெருப்புப் பொறிபோல் இம் மானின் மிக மெல்லிய உடம்பின்மேல் மெய்யாகவே அக்கணை அழுந்தும்படி செய்யாதே, செய்யாதே. ஊடுருவி அழுந்துதலில் இடியைப் போல் வலியுடைய நின் கணைகளெங்கே! அம் மடமானின் மிக மெல்லிய உயிரெங்கே! நன்றாகக் குறிவைத்த அக் கணையைத் தொடுத்த இடத்தினின்றும் வாங்கிவை; நின்கணை வருந்தி னோரைக் காக்கும் பொருட்டல்லது குற்றமில்லாதோரை அழிக்கும்பொருட்டு ஏற்பட்டதன்று.

அரசன் : இதோ அதனைத் தொடுத்த இடத்தினின்றும் வாங்கிவைத்துவிட்டேன். (அவ்வாறே செய்கின்றான்.)

துறவி : புருவின் குலத்திற்கு விளக்குப்போல்வாய், இது நினைக்குத் தகுவதேயாம். புருவின் குடியிற் பிறந்தோனே இது நினக்கு மிகவுந் தக்கதேயாம். இவ்வாறே எல்லா நல்லியல்பு களானுஞ் சிறந்த ஒரு புதல்வனை உலக வேந்தனாய்ப் பெறக்

கடவாய்.

மாணவர்

(இரு கைகளையுந் தூக்கி) மன்னர் மன்னனாம் ஒரு புதல்வனை நீ எப்படியும் பெறுவாய்.

அரசன் :(வணங்கி) அந்தணர் வாய்மொழி ஏற்கற்பாற்று.

துறவி : ஓ அரசனே, வேள்விச் சடங்கிற்கு விறகு திரட்டிக் கொணரும் பொருட்டு நாங்கள் இப்போது புறப்பட்டுச் செல்கின்றோம். அதோ! மாலினி யாற்றங்கரைப் பக்கமாய்த் துறவோர் தலைவரான கண்ணுவ முனிவரது ஆசிரமங் காணப்படுகின்றது. உம்முடைய கடமைகளுக்கு இடைஞ்சல் இல்லையாயின், அங்கே நுழைந்து ஆண்டு விருந்தேற்கப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_6.pdf/45&oldid=1577100" இலிருந்து மீள்விக்கப்பட்டது