உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 6.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாகுந்தல நாடகம்

15

பெறுவீராக. எல்லா இடர்களினின்றும் விடுவிக்கப் பட்டவர் களாய் நோன்பியற்றும் மாதவர்தம் நல்லவேள்விச் சடங்கு களை நுங்கண்ணாரக் கண்டு, வில்நாண்டழும்பேறிய நுங்கை கள் எவ்வளவுக்கு அவர்களைப் பாதுகாத்து வருகின்றன வென்பதனையுந் தெரிந்து கொள்வீர்.

அரசன் : அவ்வாசிரமத் தலைவர் இப்போது அங்கு ருக்கின்றனரா?

துறவி : வரும் விருந்தினர்க்குரிய வரிசைகள் செய்யுங் கடமையினைத் தம் மகள் சகுந்தலைக்கு ஒப்பித்துவிட்டுத், தாம் இனிநேரிடவிருக்கும் ஊழ்வினையின் தீமையைத் தணிக்கும் பாருட்டுச் சோமதீர்த்தத்திற்குப் போயிருக்கின்றார்.

அரசன் : நல்லது, அப் பெண்ணை நான் போய்க் காண்பேன்; அம் முனிவர்க்கு நான் இயற்றும் வழிபாடுகளை அப் பெண் அவர்க்கு மொழிந்திடும்.

துறவி : இப்போது நாங்கள் விடைபெற்றுக் கொள்ளு கின்றோம். (மாணவருடன் போகின்றார்)

அரசன் : பாகனே, குதிரைகளை நடத்து, தூயதான ஆசிரமத்தைக் கண்டு நமக்குள்ள கறையினைக் கழுவிக் கொள்வோம்.

தேர்ப்பாகன் : நீடுவாழ்வீர், கட்டளையிடும் வண்ணமே (திரும்பவுந் தேரை முடுக்குகின்றான்.)

அரசன்: (நாற்புறமும் பார்த்து) பாக,யாருஞ் சொல்லாமலே, தவம் இயற்றுங் கானகத்தைச் சூழ்ந்த இடங்கள் என்பதுதெற்றென விளங்கற் பாலதேயாம்.

தேர்ப்பாகன் : அஃதெப்படி?

வை

அரசன் : ஏன் நீ பார்க்கவில்லையா? பேட்டிளங்கிளிகள் உள்உறைகின்ற மரப்பொந்துகளின் வாய்களிலிருந்து விழுந்து மரங்களின் கீழ்க் காட்டுத் தானியங்கள் இறைந்து கிடக் கின்றன; வேறு சில இடங்களில் இங்குதியின் பழங்களை நசுக்கினவை என்பது தோன்ற, நெய்ப்பற்றுள்ள கற்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_6.pdf/46&oldid=1577101" இலிருந்து மீள்விக்கப்பட்டது