உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 6.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யான

L

சாகுந்தல நாடகம்

17

நிமித்தந் தோன்றுகிறது) இது துறவோர்க்கு உரிய அமைதி டமாயிருந்தும், என் வலது தோள் துடிக்கின்றது; அதன்பயன் இங்கு எங்ஙனம் பெறக்கூடுமோ? ஆயினும் என், இனி நிகழவேண்டுவனவாயுள்ள நிகழ்ச்சிகளுக்கு எவ் விடத்துங் கதவுகள் இருக்கின்றன.

திரைக்குப் பின்னே

இவ் வழியே வாருங்கள், இவ் வழியே வாருங்கள் தோழிமாரே.

!

அரசன் : (உற்றுக் கேட்டு) ஓ! இம் மரவரிசைகளுக்குத் தென் அண்டையில் எவரோ உரையாடும் ஒலி கேட்கின்றது; யான் உடனே அங்குச் செல்வேன் (சுற்றிப் போய்ப் பார்த்து) ஆ! துறவோர் குடிக்கு உரிய பெண்கள் தங்கள் தங்கள் வலுவிற்கு இசைந்த தண்ணீர்க்குடங்கள் எடுத்துக் கொண்டு இளஞ் சடிகளுக்குத் தண்ணீர்விட இவ் வழியாக வருகின்றனர். (உற்றுப் பார்த்து) ஓ! இப் பெண்கள் பார்வைக்கு எவ்வளவு அழகாய் இருக்கின்றார்கள்! முல்லைக் காட்டுத் துறவோர் குடியில் உறைகின்ற மகளிர்க்குள்ள பேரழகு அரண்மனை உவளகத்திலேயுங் காணப்படுவதில்லா அத்துணை அருமைத்தாயின், இளங்காவின் மலர்க்கொடிகள் குணத்தாற் சிறந்த காட்டுப் பூங்கொடிகட்குப் பின்னிடைதல் வாய்வதே யாம். யான் இம் மரநிழலில் ஒதுங்கியிருந்து இவர்களுக்காகக் காத்திருப்பேன். (நின்று பார்க்கின்றான்.)

(முன் சொன்னபடியே தண்ணீர்விடுதற்குச் சகுந்தலை தன் தோழிமார் இருவருடன் வருகின்றாள்.)

சகுந்தலை : இவ்வழியே வாருங்கள், இவ்வழியே வாருங்கள் தோழிமாரே.

ளஞ்

அனசூயை : அன்புள்ள சகுந்தலா, நின் தந்தை கண்ணுவர் உன்னைக் காட்டிலும் இவ்வாசிரமத்திலுள்ள செடிகளிடத்தில் மிகுந்த அன்பு வைத்திருக்கின்றாரெனக் கருதுகின்றேன்; ஏனென்றாற், புதிது அவிழ்ந்த மல்லிகை மலர்போல் நீ மெல்லியையாயிருந்தும் அச் செடியைச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_6.pdf/48&oldid=1577103" இலிருந்து மீள்விக்கப்பட்டது