உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 6.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

மறைமலையம் -6

சுற்றிலும் அகழ்ந்த சிறு வாய்க்கால்களில் நீர் நிரப்பும் படி அவர் உன்னை ஏவியிருக்கின்றனரல்லரோ !

சகுந்தலை : அஃது என் தந்தை ஏவியது மட்டும் அன்று, நானும் அவைகளிடத்து, உடன்பிறந்தாரிடத்துப் போல் அன்பு பாராட்டுகின்றேன். (செடிகளுக்குத் தண்ணீர் விடுகின்றாள்)

அரசன் : என்னை ! இவள் கண்ணுவமுனிவர் மகளா? மாட்சிமை தங்கிய காசியபர் ஆராய்ந்து பாராதவரா யிருக்கின்றார்! ஆதலினாற்றான், ஆசிரமத்திற்குரிய கடமை களை இவள் செய்யும்படி ஏவியிருக்கின்றார். செயற்கை யாலன்றி இயற்கையா லழகுநலங் கனிந்த இப் பெண்ணின் ம்பைக் கொடிய தவத்தொழில்கள் புரியும்படி இசைவித்த அம்முனிவர், விறகுக்காக வளர்ந்த செடியினைக் குவளை மலரின் மெல்லிய இதழ்விளிம்பால் அறுக்கத் துணிந்த வராகவே இருக்கின்றார். நல்லது, நான் இம் மரங்களின் பின்னே மறைந்துகொண்டு யாதுந்தடையின்றி அவளைக் கண்ணாரக் காண்பேன். (அவ்வாறே மறைகின்றான்.)

உட

சகுந்தலை : அன்புள்ள அனசூயே, பிரியம்வதை இம்மர வுரியினை என் பருங் கொங்கைகண்மேல் வருந்தும்படி மிக இறுக்கிக்கட்டிவிட்டாள்.அன்புகூர்ந்து இதனை நெகிழ்த்து விடு.

அனசூயை : அப்படியே (அதனை நெகிழ்த்துகின்றாள்.)

பிரியம்வதை : (சிரித்துக் கொண்டு) நின் கொங்கைகள் திரண்டு மிகப் பருத்துப் புடைக்கும்படி செய்த நின் இளம் பருவத்தைக் கடிந்துகொள்.

ப்

சிறு

அரசன் : (தனக்குள்) இப் பெண் நன்கு சொன்னாள். மரநாரின் இழைகளால் நெய்த அம்மரவுரியாடை முடிச்சுக்களால் தோள்மேற் கட்டப்பட்டு, இவள் தன் பரிய ரு கொங்கைகளைப் பொதிந்து கொண்டமையால், வெளிறிய புறவிதழ் இலையாற் புனைந்த மூடியினுட் பொதித்திட்ட மலர் முகிழ்போல் இவள் இளைய மேனியின் எழில் நலங்கள் கண்ணுக்குப் புலப்படவில்லை. இவளது ஆண்டிற்கு டிற்கு மரவுரியாடை பொருந்தாதது உண்மையே;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_6.pdf/49&oldid=1577104" இலிருந்து மீள்விக்கப்பட்டது