உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 6.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

மறைமலையம் 6

கொங்கைகள் உயர்ந்துயர்ந்து தாழ்கின்றன. இவள் காதிற் செருகியிருக்கும் பிண்டி மலர்கள் அசையாதபடி தடுத்து வியர்வை நுண்டுளிகள் வள் முகமெங்கும் அரும்பி

யிருக்கின்றன;

வடன் கருங்குழல் முடிப்புக் கட்டவிழ்ந்தமை

யால் அலைந்து தொங்காநின்ற கூந்தல் ஒரு கையிற் பிடிக்கப்பட் டிருக்கின்றது. ஆகையால், நானே அவள் கட னைத் தீர்த்துவிடுகின்றேன். (தன் கணையாழியைக் கொடுக்க விரும்பு

கின்றான்.)

(இருவரும் அக் கணையாழியின்மேற் செதுக்கி யிருக்கும் எழுத்துக்களைக் கண்டு ஒருவரையொருவர் வெறித்துப் பார்க்கின்றார்கள்.)

அரசன் : நம்மைப்பற்றி நீங்கள் வேறாக நினைத்தல் வேண்டாம். இஃதரசனாற் பரிசிலாகக் கொடுக்கப்பட்டதாகும்.

பிரியம்வதை: அப்படியாயின் இஃது உண்மையாகவே தங்கள் விரலினின்றுங் கழன்று பிரியப்படாது. தாங்கள் மொழிந்த அருமை மொழியினாலேயே அக் கடன் தீர்ந்து விட ட்டது. (சிறிது அப்புறந்திரும்பி) ஏடீ, சகுந்தலே நின்மேல் இரக்கமுற்ற ப்பெருமான் அல்லது மன்னனால் நீ விடுவிக்கப்பட்டனை. நீ இப்போது போகலாம்.

நீ

சகுந்தலை: (தனக்குள்) ஆம், நானே என் விருப்பப்படி நடக்கக் கூடுமாயின், (உரக்க) என்னைப் போகச் சொல்லவும் நிறுத்தவும் நீ யார்?

அரசன் : (சகுந்தலையைப் பார்த்துத் தனக்குள்) நான் இவள்மேற் காதலுற்று இருப்பதுபோல் இவளும் என்மேற் காதலுற்றிருப்பாளா? நான் காதல் உறுவதற்கு இடம் இருக்கின்றது. ஏனெனில், இவள் என்னுடன் கலந்து உரையாடாவிட்டாலும், நான் பேசும்போது காது கொடுத்து உற்றுக்கேட்கின்றனள்; இவள் என் முகத்தை ஏறிட்டுப் பாராமல் நிற்பது உண்மையே; ஆயினும், இவள் தன் கடைக்கண் நோக்கம் மிகுதியும் என்னையன்றி, வேறொன் றனையும் பார்க்கின்றிலது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_6.pdf/59&oldid=1577116" இலிருந்து மீள்விக்கப்பட்டது