உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 6.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாகுந்தல நாடகம்

(திரைக்குப்பின்னே)

29

ஓ துறவிகளே! துறவாசிரமத்திலுள்ள விலங்கினங்களைக் காக்கும்பொருட்டு நீங்கள் இங்கேயே இருங்கள் துஷியந்த மன்னன் வேட்டமாடிக் கொண்டு கிட்ட வருகின்றாரென்று செய்தி எட்டுகின்றது; அங்ஙனம் வருதலிற், குதிரைக் குளப்படிகளாற் கிளப்பப்பட்ட புழுதி, சாய்ங்கால வெயில் வெளிச்சத்திற் றோய்ந்து, ஆசிரமத்து மரக்கிளைகளில் உலரத் தாங்கவிட்டிருக்கும் ஈர மரவுரியாை மரவுரியாடைகளிற் படிவது விட்டிற்கிளிகள் தொகுதி தொகுதியாய் வந்து விழுவதுபோல் தோன்றுகின்றது. மேலுந், தேரின் வருகையைக் கண்டு மருண்ட ஓர் யானை, நம்முடைய தவத்திற்கு இடையூறு செய்வ தொன்றே ஓர் உருவெடுத்து வருவது போல் தோன்றி, மான் மந்தைகளைக் கலைத்துக்கொண்டும், ஒரு மரக் கிளையில் தன் மருப்பு அழுந்தித் தைக்க அதனை முறித்து எடுத்துக்கொண்டும், தன் முன்மார்பால் இழுப்புண்ட படர்கொடிச் சுருள்கள் தன் உடம்பைச் சுற்றி வலை போற் பின்னிக்கொள்ள ஆசிரமத் திற்குள் ஓடிவருகின்றது.

(எல்லாரும் இதனைக் கேட்டுக் கலக்கமடைகின்றனர்.)

அரசன் : (தனக்குள்) சீ! சீ! நம்மைத் தேடிக்கொண்டு வரும் நகரத்தவர் துறவாசிரமத்திற்குத் துன்பத்தை உண்டுபண்ணு கின்றனர் போலும்! நிற்க (அதுகிடக்க) நாம் இப்போதைக்குத் திரும்பிப் போகலாம்.

அனசூயை : நல்லோய்! காட்டு யானை வெருண்டு வருதலைக் கேட்டு நாங்கள் மிக அஞ்சுகின்றோம். நாங்கள் எங்கள் குடிலுக்குச் செல்லும்படி விடைகொடுங்கள்.

அரசன் : (விரைந்து) நீங்கள் போகலாம்; நாமும் த் துறவாசிரமத்திற்கு ஏதும் இடைஞ்சல் உண்டாகாவண்ணம் இயல்பாக இருப்போம்.

(எல்லாரும் எழுந்திருக்கின்றனர்.)

இரண்டு தோழிமாரும் : விழுமியோய்! விருந்தினர்க்குச் 6 வழிபாடுகளுள் ஒன்றும்

சய்யப்படும்

உங்கட்குச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_6.pdf/60&oldid=1577117" இலிருந்து மீள்விக்கப்பட்டது