30
மறைமலையம் -6
செய்யப்படாமையால், நீங்கள் மறுபடியும் ஒருமுறை இங்குவருதல் வேண்டுமெனக் கேட்க எங்கட்கு வெட்கமா யிருக்கின்றது.
அரசன் : ‘அப்படிச் சொல்லல் வேண்டாம், வேண்டாம். உங்களைப் பார்த்தமையினாலேயே நான் எல்லாச் சிறப்பும் பெற்றவன் ஆயினேன்.
அனசூயை : அன்புள்ள சகுந்தலே! நம் அன்னை உன்னைப்பற்றி மிகவுங் கவலையாய் இருப்பள். விரைவாக நாம் எல்லாஞ் செவ்வையாய் வீடுபோய்ச் சேர்வம்.
சகுந்தலை : (மெதுவாக நடந்து) ஐயோ! என்னால் நடக்க முடியவில்லையே ; இருந்தாற்போலிருந்து என் பக்கத்தில் ஏதோ நோவுகின்றதே. ஆ! அனசூயே, என் அடியில் இந்தத் தருப்பைப் புல்லின் கூரியநுனை குத்திக் காயமாக்கி
என்
விட்டதுபார்; இதோ இந்த இதோ இந்த முட்செடியின்மேல் மரவுரியாடை அகப்பட்டுக்கொண்டது; என்னைப் பிடித்துக் கொண்டு ஆடையை அதனின்றும் எடுத்துவிடு.
L
(சகுந்தலை இங்ஙனஞ் சூழலாய்த் தோழிமாரை நிறுத்தி நிறுத்தி அரசனைப் பார்த்துக்கொண்டே அவர்களுடன் போய்விடுகின்றாள்.)
அரசன் : நகரத்திற்குப் போகவேண்டுமென்னும் என்விருப்பந் தணிந்துவிட்டது; இதற்கிடையில், என்னோடு வந்தவர்களுடன்போய்ச் சேர்ந்து, இத் துறவாசிரமத்திற்கு மிக எட்டியிராத இடத்திலேயே அவர்கள் கூடாரமடிக்கும் படி செய்விப்பேன். சகுந்தலையைப் பற்றி எண்ணுவதை விடுத்து வேறோரு முகமாய் என் அறிவைத் திருப்ப என்னாற் கூட வில்லையே; என்னை? என் உடம்பு முன் செல்லா நிற்பவும் என் உள்ளம் அதனோடு இணங்கிப் போகாமல், காற்றோட்டத் திற்கு எதிரே பிடித்த கொடிமரத்தின் பட்டாடைபோல் பின் திரும்பிப் பறக்கின்றதே.
(எல்லாரும் போய் விடுகின்றனர்.)
முதல் வகுப்பு முடிந்தது.