உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 6.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

மறைமலையம் -6

திரும்பவேண்டுமென்ற பேச்சைக்கூட எடுக்கிறதில்லை. ன்றுங்கூட அவன் அப் பெண்ணைப் பற்றிய நினைவில் ஆழ்ந்திருக்கும்போது அவன் கண்கள் பொழுதுவிடியக் கண்டன. யான் யாது செய்யக்கூடும்? இப்போது அவன் தன் காலைக்கடன்களை முடித்திருப்பனாதலால், அவனைப் போய்க் காண்கின்றேன். (சுற்றிப்போய்ப் பார்க்கின்றான்) கையில் வில் ஏந்தினராய்க் காட்டு மலர்களால் தொடுத்த மாலை அணிந்த தன் யவனப் பணிப்பெண்கள் சூழ என் இனிய நண்பன் இதோ வந்து கொண்டிருக்கின்றான். நல்லது, என் உடம்பின் உறுப்புகள் மூட்டுவிட்டுப் போனதனால் நொண்டியானதுபோல் நிற்கின்றேன். இந்தச் சூழ்ச்சி யினாலாவது நான் இந்தத் தொல்லையினின்றும் விடுபட மாட்டேனோ. (ஒரு கோலைப் பற்றிக் கொண்டு நிற்கின்றான்.) (பிறகு அரசன் மேலே சொன்னபடி தன் ஏவற் பெண்களுடன் வருகின்றான்.)

அரசன் : காதலன்பிற்கேற்ற அப் பெண்மணி எளிதிற் கிடைப்பவள் அல்லள்; ஆயினும், என் மனமோ அவள் கருத்தினை உற்றுணர்ந்ததனால் ஆறுதலுடையதாகின்றது. காதலிக்கப்பட்ட பாருள் பெறப்படா விடினும், இருவரிடத்தும் நிகழும் அக் காதலனது இன்பத்தை விளைக்கின்றது. (புன் முறுவல் கொண்டு) இங்ஙனமே, தான் விழைந்த பெண்ணும் தன்னைப்போலவே காதல் கொண்டிருப்பளெனத் தன்மனம் போனபடி யெண்ணி வருந்துவது காதலனுக்கு இயற்கையாய் இருக்கின்றது. தான் வேறொரு முகமாய்ப் பார்ப்பவள் போலிருந்தாலும் அவள் காமுற்று மெல்லென விழித்தமையுங், கடிதடப் பொறை யினால் மெல்ல நடக்கையில் விளையாடிச் சென்றமையும், ‘ஏடீ போகாதே' என்று தன் தோழியினால் மறிக்கப் பட்ட விடத்து அவளைக் கடிந்து பேசினமையும் எல்லாம் என்னைக் குறித்தே செய்தனள்போலும்! ஆ! காதலர் இவை போல்வன வெல்லாந் தம்மைக் குறித்தே நிகழ்ந்தன வன்று கருதுகின்றனர் !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_6.pdf/63&oldid=1577120" இலிருந்து மீள்விக்கப்பட்டது