உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

  • மறைமலையம் -8 8

பொருட்டு ஊர்த்துவ முகமாய் மேனோக்கிச் செல்கின்ற ஆன்மாவுக்கு தவியாய் நிற்கும் மனம் அஃது அதனைச் சென்றணையுங்காறுங் கீழ்நின்றூக்கிப் பின்றான் தொழிலறுந்து கிடக்குமென்றுணர்க.

இனி ‘ஆன்மாவாலறிதல்'என்பது ஆன்மாவைப்போற் பரமான்மாவுஞ் சேதனப்பொருளே யாமென்று துணிந்து, அங்ஙனமாயினும் நான் அறியுஞ் சித்து அஃது அறிவிக்குஞ்சித்து, நான்பண்டே அறியாமையோ டுள்ளேன் அவன் பண்டே மெய்யறிவோடுள்ளானென்றிவ்வாறறிதல். 'வழிபடற் பாலதன் பெயரால் வழிபடற்பாலான்' என்பது திருவருள் வழிநின்று தியானிக்க வென்றது.

இனி எட்டாஞ் யடைதற்குரிய சாதனமான கருமகாண்டத்தினுள்ளும் ஈண்டைக்கு வேண்டுவனவாகிய தபம்தமம் முதலியகருமங்கள் சிலவும் வகுத்துக் கூறினார். இதனாற் கருமங்கள் முத்திப் பெரும்பேற்றிற்கு இன்றியமையாச் சாதனங்களா மென்ப தூஉமுடன் பட்ட வாறாயிற்று.

சுலோகத்தால் ஞானபாதத்தை

இனி ஒன்பதாஞ் சுலோகத்தாற் பயன்கூறி முடித்தார். ங்ஙனம் நான்கு கண்டங்களாக வகுத்துரைக்கப்பட்டுச் சாமவேதத்தைச் சார்ந்து நிற்கும் கேனோபநிடதஞ் சித்தாந்த சைவப் பொருளேபற்றி வந்தவாறு நன்கு விளக்கப்பட்டது.

கிருஷ்ண எசுர் வேதத்தைச் சேர்ந்த

சுவேதாசுவதரோப நிடத மொழிபெயர்ப்பு

எங்கிருந்து

பிரமவிசாரஞ் செய்வோர் தம்முளே உரையாடுகின்றார். பிரமம் எந்தக்காரணமாயுள்ளது? நாம் படைக்கப்பட்டோம்? யாரால் நாம் உயிர் பிழைத்திருக்கின்றோம்? சங்காரகாலத்தே நாம் யாண்டு இருப்போம்? எவரால் அதிட்டிக்கப்பட்டுச் சுகதுக்கவிதிவழிச் செல்லுகின்றோம்? ஓ பிரமஞானிகளே!

(1)

காலமோபிரமம்? அல்லது, சுவாவமோ? அல்லது கன்மகாரியமோ? சடிதிக்கரும நிகழ்ச்சியோ? பூதங்களோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/145&oldid=1574561" இலிருந்து மீள்விக்கப்பட்டது