உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

119

மொழிந்திடுதலின், அப்பிரமமென்னும் பொதுச்சத்த வாச்சியப் பொருள் சிவபெருமானே யாமென்பது தேற்றம். பிறவாறுரைப் பார்க்கு அவர் தம் மேற்கோளை நிறுத்தும் ஏதுவின்றா யொழிதன் மேலுஞ் சைவசித்தாந்தப் பொருள்பற்றி வந்த இவ்வுபநிடதக் கருத்து மாறுபடுமாம்.

இனி-2-ம்-3-ம் சுலோகங்களில் பலவேறு வகையான தேவர்தம்முள் அங்கி வாயு இந்திரன் என்னு மூவருமே மேம்பாடடைதலென்னை யென்னுங் கடாவை விடுத்தற்கு அவர்கள் ஒருவாறு பிரமத்தைத் தொட்டார்கள், பிரமத்தை முதலிலறிந்தார்களாதலின்’என்றார்; அவருள்ளும் இந்திரன் அம்மையார் ணர்த்தச் சிவனை உணர்ந்தானாகலின் மற்றைத் தேவர் சிவனைக்கண்டார்,

மேம்பாடெய்தியது

இந்திரன் சிவனையுணர்ந்தான்.

இனி க்கண்டத்து நான்காஞ் சுலோகங்களாறுஞ் சிவபரம்பொருளைத் தேவர்களொடு சார்த்தி யளந்தறியுமாறு சொல்லி யொழிந்தார். தாம் நேரே காணாமல் ஏனையோர் காணும் வகைபற்றி யறிதல் தமக்குத்தெளிய விளங்காமையான் அதுவுங் குறைபாடுடையதென்றல் பொருத்தம் பெரிதுடைய தாமென்றுணர்க.

இனி ஆன்மாவொடு குறிப்பிட்டு அறியுமாறு கூறுவா னெடுத்துக் கொண்டுரைக்கின்றார். முன்னெல்லாம் முதல்வன் வாக்குமனாதீத னென்றுரைத்து ஈண்டு மனம் அவனை யணுகுகின்ற தெனில் மாறுகோளாமெனின்; மாறுகொள்ளாது. மனம் புறப்பொருளை யறியுமாறுபோலத் தன்னின் வேறாய்க் காணாது தன்னுண்ணின்று தன்னையுமியக்குவானவனே யென்றுணரல் வல்லுமாயின் அஃது அப்பிரமத்தை அணுகிய வாறேயாம். சீவபோத முனைப்பான் முன்னிலைப்படுத்தி யுணர்கின்ற வுணர்வும், அங்ஙனம் முனைப்பின்றி நின்றவாறே நின்றுணருணர்வுமென உணர்ச்சியெல்லாம் இருவேறு வகுப்புறுகின்றன வாகலின் சீவபோதமுனைப்பின்றி யுணருமாறு திக்கின்ற இது மேலதனோடு மாறுபடுதலில்லை யென்றொழிக. இங்ஙனம் மரமேறுகின்றவனுக் குதவியாய்க் கீழ்நின்றூக்குவோன் ஏறுகின்றவன் மரத்தினுச்சி சென்று பற்றுங்காறும் மேன் மேலூக்கிப்பின் றான்கழியுமாறுபோலச் சிவத்தைத் தலைக்கூடும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/144&oldid=1574560" இலிருந்து மீள்விக்கப்பட்டது