உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

மறைமலையம் லயம் – 8

பட்டு நின்றானாயின் அவனறியு மாறு அப்பரப்பிரமப்பொருள் 2 னிது விளங்கல் வேண்டும்; அவ்வாறின்றி அவனெதிரே சடிதியில் மறைந்து போயிற்றென் றுரைத்ததென்னை யெனின் மற்றைத் தேவர்களினும் இந்திரன் முதன்மை யுடையானென்று சொல்லப்படுதலின், அத்துணைப் பெரியனான அவ்விந்திரன் ஆற்றலு மறிவும் பிரம்மத்தின்முன் விளக்கமின்றா யொழியு மென்பது காட்டுதற் பொருட்டு அவ்வாறு மறைந்தருளினா னன்க. அங்ஙனம் மறைந்தருளினும் அவன் மற்றைத் தேவர்களைப் போற்றிரும்பி வாளாது போகாமல், ஆண்டு நின்றவாறே தியானஞ் செய்து கொண்டிருந் தமையால் அவனுக்குத் திருவருட்பேறு சித்தித்ததென்றுணர்க. நிற்க.

காணப்படாமையான்

L

இனி இம்மூன்றாங்கண்டத்திறுதியிற் போந்த இமவான் புதல்வியான உமாதேவியார் செந்தமிழ் வழங்கு மக்கள் சிவபெருமானோ டொருங்கு கொண்டு வழிபட்ட தெய்வ மென்பதுணர மாட்டாதார், உமைசிவம் என்னுந் தெய்வ வழிபாடு இருக்குவேத முதலான பழைய வடநூல்களிற் இங்கே உமாவென்னுஞ் சொல் ஞானத்தைக் குறிக்குமெனவும், அற்றேல் இமவான் புதல்வி யென்ற தென்னையெனின், இமயமலைச்சாரலில் நூல்வல்லா ரெல்லா மொன்றுகூடிஞானநூலாராய்ச்சி செய்தமையானே உருவகத்தால் அவ்வாறு சொல்லப்பட்ட தெனவும் பிறவு மெல்லாந் தமக்கு வேண்டியவாறே கூறினார். கேனமுதலான பிராசீன உபநிடதங்களெழுதப்பட்ட காலத்தே ஆரியமக்கள் தமிழ் வழங்கு நன்மக்களோடு ஒருங்கு விராய்ப்பழகப் புகுந்தாராகலின், அநாகரிக நிலையிலிருந்த தம் சூரியோபாசனை அங்கியு பாசனை வாயுவுபாசனை முதலியவற்றை நீக்கி உன்னத நாகரிக நிலையிலிருந்த சிவோபாசனையைத்தழுவிக் கொண்டார். அங்ஙனந் தழுவிக்கொண்ட மாத்திரை யானே தாம்வழிபட்ட இந்திரன் முதலான தெய்வங்களினது இழிபுணர்ந்து சிவபரம் பொருட் பெற்றிதேர்ந்து தாமியற்றிய பின்னூல்களினெல்லாம் அச்சிவபரம்பொரு ளுபாசனையை விதந்தெடுத்து மொழிந் திட்டார்.இன்னுமிதன் விரிவெல்லாஞ் சமயம்வாய்க்கும் போழ்து வேறு கூறுவாம். நிற்க.

இனி நான்காங் கண்டத்து முதற்சுலோகத்தானே ஆண்டுத் தோன்றிய இயக்கனை உமாதேவியார் பிரமமென்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/143&oldid=1574559" இலிருந்து மீள்விக்கப்பட்டது