உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

117

முதலான தேவர் அவனை அறிந்திலரென்றதனாலே, ஈசரன் றிருவருள்வழி நின்றாரன்றி யேனையோ ரவனைக் காண்டல் செல்லாதென்பது பெற்றாம். இனி மூன்றாங்கண்டத் திறுதிச் சுலோகத்தில் ‘இனிது அலங்கரிக்கப்பட்டவளும் இமவான் புதல்வியுமான உமை' தோன்றினாளெனவும், நான்காங்கண்டம் முதற்சுலோகத்தில் ‘அவள் அது பிரம' மெனமொழிந்து இந்திரனுக்கு அறிவு கொளுத்தினாளெனவுஞ் சொல்லப்பட்ட வாற்றால், திருவருள் விளக்கம்பெற்ற இந்திரன் மாத்திரம் அப்பிரமத்தை ஒரு வாற்றா லறிந்தானென்பது பெற்றாம், ‘உ 'உமை’ தோன்றி யறிவுறுத்தாளென்பதனால் ஆண்டுத் தோன்றிய பிரமந்தானே சிவமென்பது பெறப்படும். சிவத்திலே தாதான்மிய சம்பந்தமுற்றுப் பிரிவற நின்ற திருவருட்சக்தி உமையென்று அவ்வாறு விதந்து சொல்லப்பட்டது.சிவன்றானே அப்பனாகவும் அவனொடு தற்கிழமையாய் நின்ற திருவருளே அம்மையாகவு மமர்ந்து ஆன்மாக்களாகிய பசுங்குழவிகளை யாண்டருளல் வேண்டினமையின் இருவருமே எழுந்தருளிப் போந்து தேவர்க்கு அநுக்கிரகிப்பாராயினார். அங்ஙனம் அநுக்கிரகிக்கின்ற விடத்தும் தாய் காட்டவே பிள்ளை தந்தையைக் காண்டல்போல் உமை யுணர்த்த இந்திரன் உணர்ந்தான். இதனால், ஆன்மாக் களெல்லாந்திருவருள் உணர்த்த உணருகின்றவரே யன்றித் தாமாகவே யுணருநீர ரல்ல ரென்பதும் பெறப்பட்டவாறு காண்க. தாய் கருணையே வடிவாகவுடைய ளென்பதும், அவளே பிள்ளைக்கு மிகநெருங்கிய பழக்க முடைய ளென்பதும் எல்லார்க்கு மொப்ப முடிந்த தொன்றாயினுந் தமிழ் முது மக்கண்மாத்திரம் அதனை விதந்தெடுத்து வழங்குகின்றார். இதற்குத் தமிழ் நூலுரைகளும் பழமொழி வாக்கியங்களுஞ் சான்று பகர்கின்றன. “அன்னையும் பிதாவு முன்னறிதெய்வம் “தாயினுநல்ல சங்கரா வுனக்கி வடகும்” என்றற் றொடக்கத்துத் திருவாக்குகளும் ஈண்டுக் குறிக்கொளற் பாலனவாம். தமிழ் முதுமக்கள் ஈசுரனை உபாசிக் கின்ற காலத்தும் அம்மையப்ப ராகவெழுந்த சகள மங்கள வருட் கோலத்தினையே வழிபடு மாறும் இதனை வலியுறுத்தாநிற்கும். அவ்வாறெல்லாம் நியாய வாராய்ச்சி செய்கின்றவிடத்து ‘அம்மா"வென்னுந் தமிழ்ச் சொல்லே வடமொழியில் ‘உமா’ எனத் திரிந்ததென்று ஊகிக்க இடமுண்டாகின்றது. 'உமா' என்னுஞ் சொல்லுக்கு வேறு வேறுற்பத்தி கூறுவாருமுளர். இது நிற்க. இந்திரன் அருள்வழிப்

L

L

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/142&oldid=1574558" இலிருந்து மீள்விக்கப்பட்டது