உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

❖ LDMM LDMELD - 8 →

மறைமலையம் லயம் –

இனிவரும் சுலோகத்தாற் பிரமஞான

L

மில்லாதவர் களுக்குப் பிறவித் துன்ப மிடையறாது நிகழுமெனவும், அஃதுடையார்க்கு அஃதின்றாமெனவும் வலியுறுத்தினார். வ்வாறு இவ்விரண் டாங்கண்டத்தில், ஆன்மாவொடு சார்த்தியுந் தேவர்களோடு சார்த்தியும் பிரமத்தை யளந்தறிதல் செல்லாதென நுதலிப் புகுந்து, அவற்றுள் ஆன்மாவொடு சார்த்தி யளந்துணர்தல் கூடாதெனப் புகுத்துக்கொண்டு அதனை விரித்துக்கூறினார். இனித் தேவர்களோடு சார்த்தியௗந் துணர்தலுங் கூடாதென விரித்துரைப்பான் புகுந்து மூன்றாங் கண்டத்திலோர் சரிதஞ் கூறுகின்றார்.

.

இனிப் பரப்பிரமப்பொருளான முதல்வன் செய்வன வெல்லாம் பிறர் பொருட்டேயாம், தன்பொருட்டல்ல. தன்பொருட்டுச்செய்யாமை யென்னையெனின்; தனக்கோர் குறைபாடின்மையாலென்க. தமக்குள்ள குறையினை நிரப்பவே யாரும் வினைசெய்யக் காண்கின்றோம். எல்லாவற்றானும் நிறைவுடையார்க்கு அங்ஙனமோர் முயற்சி வேண்டப்படாமை போல. எல்லாம்வல்ல கடவுளுக்குத் தன்பொருட்டு முயற்சி யில்லையென் றொழிக. அற்றேல் பிறர் பொருட்டுத்தான் அஃது இயற்று தலென்னையெனின்; தனக்குள்ள பெருங்கருணை பற்றியே யாமென்று விடுக்க. இது தெரிப்பவே மூன்றாங் கண்டத்து முதற்சுலோகத்தில் தேவர்கள் பொருட்டுப் பிரம மானது ஒருகாலத்து வெற்றிகொண்டது' என்று சொல்லப்பட்டது. பிரமந் தம்மைக் காக்கும்பொருட்டு எய்துவித்த வெற்றியைத் தேவர்கள் தமக்குரியதென்று நினைதல் பெரிதும் ஏதமாம். பிறனொருவன் வருந்தி யீட்டிய பொருட்டொகுதியைத் தனக்குரிய தென்பான் போலப் பிரமத்திற்குரிய பொருளைத் தனதென்று பிறழ வுணர்தல் மயக்கவறிவாம். அந்த மயக்க வறிவையே விதையாகக்கொண்டு பேரிடர் விளைந்துறுதலால் அவ்வறிவைக் களைந்து அவ்வப் பொருண் மெய்ம்மை தெரிதல் எல்லார்க்கும் இன்றியமையாத கடமையாம். இக்கடப்பாடறி யாத தேவர்களுக்கு அறிவு கொளுத்தி அவரைக்காத்தல் வேண்டி அவன் அவரெதிரே ஓரியக்க வேடந்தாங்கித் தோன்றினான் என்றார்.

இனிக் கட்புலனாய் விளங்கிய முழுமுதற்கடவுள் அருட் கருணைக்கோலத்தைக்கண்டும் அங்கி வாயு இந்திரன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/141&oldid=1574557" இலிருந்து மீள்விக்கப்பட்டது