உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

115

சிறிதே யறிந்து தம்முட்டாமே மகிழ்வர். இங்ஙனம் இன்பந் துய்த்து ஒருமையுற்று அறிவழிந்திருக்குங்காலமும் வேறே, இவ்வாறின்ப மெய்தினேனென்று அறிவுகொள்ளுங் காலமும் வேறேயாதல் அநுபவமாய் நிகழ்தலால், முழுமுதற் பரம்பொரு ளோடு ஒன்றி யொன்றறக்கலந்து இன்பமுதிர்ச்சியே அறிவாய் விளங்கப் பெறுகின்ற காலத்தே சீவபோதமுனைந்திருத்தல் இல்லையாம். இனிச் சீவபோதம் விரிந்து “யானறிந்தேன் அறகின்றேன் அறிவேன்” என்று அநுபவம் நிகழும்போது, முன் ஆன்மவுணர்வின் நடுவிற் கருக்கிடந்து முதிர்ந்து பெருகி அவ்வான்ம வுணர்வைக் கவர்ந்துகொண்ட சிவானந்தந்திரும்பச் சுருங்குதலுற்று அதனிடையே கரந்துபோகாநிற்கும். இவ்வுண்மை யுணர்த்துதற்கன்றே “உணர்ந்தார்க் குணர்வரியோன் றில்லைச் சிற்றம்பலத் தொருத்தன்” என்றதனை யுணர்ந்தோர் கூறிய ருளியதூஉமென்க. இருந்தவாற்றாற்குறியறவுணர்ந்து சலிப்பின்றி நிற்கும் ஞானமே சிவஞானமாம். அதுவே பிரமஞான மென்றுஞ் சொல்லப்படும். இதனையொழித்து ஒழிந்த ஞானங்களான் முதல்வனை யறிவேமென்பார். அறியாதவரே யாவரெனவும் அச்சிவஞான வழிநின்று இறைவனை யுணர்வார் அவனை யுண்மை யானுணர்ந் தாரே யாவரெனவும் நிச்சயித்தற் கெழுந்தன வாகலின் அவ்வாக்கியங்கள் தம்முள் முரண்படுமாறில்லை யென்றொழிக.

இனி “நினைக்கப்படுவன ஒவ்வொன்றும்” என்னும் நான்காஞ் சுலோகம் அச்சிவஞானம் தலைப்படுதற்குரிய நன்மார்க்கம் இதுவென்று காட்டுதல் நுதலிற்று. அச் சிவபரம்பொருள் அண்டபிண்டங்க ளெல்லாவற்றுள்ளும் புறம்பும் ஒப்பவியாபித்து நிற்கும் முழுமுதன்மை யருள் விலாசத்தைக்கண்டு அதன் கண்ணே சலிப்பின்றி நிற்கப்பெறின் அவன் பிரமத்தைத் தலைப்பட்டு இறப்பினின்று விடுபடு கின்றான். இங்ஙனஞ் சகல சாக்கிரத்தின் கண்ணே நின்மல துரியாதீத நிலைகூடுமாறு அறிவுறுத்துகின்ற இச்சுலோகம் சைவசித்தாந்த முடிபொருள் தலைக்கணிந்து நனிவிளங்கு முண்மை “இந்நிலை தானில்லையே லெல்லா மீசனிடத்தினினு மீச னெல்லாவிடத்தினினு மியன்ற, அந்நிலையை யறிந்து” என்னுஞ் சிவஞானசித்தித் திருவாக்கானுங் காண்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/140&oldid=1574556" இலிருந்து மீள்விக்கப்பட்டது