உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

L

8

மறைமலையம் -8

பாலன் என்று கோடல் பொருந்தாதென்பான் ‘அவனைநன்கு அறிவேனென்று நான் நினைக்கின்றிலேன்' என்று கூறினான். ஆன்ம ஞானத்திற்கு விளங்காமையானே அஃது அறியப்படு பொருளன்றா யொழியாதென்பான் ‘அவன் அறியப்படு பாருளென நான் நினைப்பதல்லாமல்'என்று கூறினான். இத்துணையினமையாமல் மேலுந் தன் கருத்தினிது விளங்கும் பொருட்டு அவனை யறியேனென்று நானறியேன்’என எதிர்மறை முகத்தாற் கூறியொழிந்தான். இதனானும் மேலுரைத்ததே இவ்வுபநிடதத்தின் பொருளென்றுணர்க. அற்றேலஃதாக, ஆசிரியன் அநுவாதவுரையாய் வந்து மேலும் அதனையே வலியுறுத்துகின்ற பிரமம் அறியப்படுபொருளன்று என்று நினைபவனாற் பிரமம் அறியப்படுகிறது; பிரமம் அறியப்படுபொருளே யாமென்று நினைபவனால் அஃது அறியப்படுவதில்லை' என்னும் வாக்கியங்கள் தம்முள் யையாமை யான் அவற்றை யிணக்கி யுரைசொல்லுமாறு யாங்ஙனமெனிற் காட்டுதும். சீவபோதமுனைப்பான யான்

னுமுணர்வு செல்கின்ற காலத்தெல்லாம் அறிவுருவா யொருபொருளோடு ஒருமையுற்று நிற்கும் அநுபவம் நிகழாது; இனி அப்பொருளோடங்ஙனம் ஒருமையுற்று அநுபவ நிகழும்போதெல்லாம் யானென்னு முணர்வு செல்லாது; இதுபற்றியன்றே ஆசிரியர் நக்கீரனாரும் “ஆற்றாமை யென்பது பிறிதெவ்வுணர்வு மின்றி யவ்வாற்றாமை தானேயாவது என்றுரை யுரைப்பாராயினார். இதனை உதாரணமுகத்தானும் விளக்குவாம். அயர்ந்துறங்குங் காலத்தே யாணவமலசத்தியோடு ஒருமித்திருந்து இன்ப நுகர்ந்து கிடக்குமுயிர் அக்காலத்து நான் இன்ப நுகருகின்றே னென்றறியமாட்டாது; உறங்கி விழித்தெழுந்து “நான் நன்றாய்த் தூங்கினேன்' என்று

தெரிதலுறுகின்ற காலத்தே அவ்வுயிர் உறக்கத்தின் கட்டுய்க்கும் இன்பத்தையறியாது. இவ்வாறே சுழி பெருஞ்சுவையுடைய ஓரரிய அமிழ்தம் நாவிற்றொட்டு உருசிகாண்காலத்து ‘எனக்கு இஃது மிக உருசிக்கின்றது'என்று யாருமுரையார். அதனை உருசிகண் டறிந்த மற்றைக்கணத்திலே அதனை அவ்வாறறிவர். ஒருவனு மொருத்தியுங் காமச்சுவை விகற்பமெல்லாம் ஒருங்கு கொண்டு துய்க்கின்ற பொழுது உணர்வின்றியவசமுற்றுக்கிடந்து அது கழிந்த துணைாயானே அவ்வின்பம் இவ்வாறிருந்ததெனச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/139&oldid=1574555" இலிருந்து மீள்விக்கப்பட்டது