உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

ஞானசாகரம்

113

நின்று

வ்விரண்டு தன்மையுமின்றி வாக்கு மனாதீதகோசரமாய்நின்ற வதுவே சத்தாயுள்ள சிவ மென்றுணரற்பாற்று” என்று வார்த்திகப் பொழிப்புரைத் தருளினாரென்க. ஆகவே, தூல சூக்குமமாகு மாயாகருவிகளைக் கொண்டுணரும் ஆன்மஞான மாத்திரைக்கே பரப்பிரமப் பொருள் விளங்காதென்பதூஉம், அக்கருவிகளினுதவியின்றியவற்றை யிறந்து அப்பரப்பிரமப்பொருளின் றிருவருணெறி சார்ந்தொழுகும் பதிஞானத்திற்கு ஞேய விசேடமாய் அஃது புலனாய் விளங்கு மென்பதூஉம் பெற்றாம். இந்நுட்பந் தெரித்தற்கன்றே ஊனக்கண் பாசமுணராப் பதியை, ஞானக்கண்ணினிற் சிந்தை நாடி”எனவும் “பாசஞானத் தாலும் பசுஞானத்தாலும் பார்ப்பரிய பரம்பரனைப் பதிஞானத்தாலே, நேசமொடு முள்ளத்தே நாடி” எனவும் அருமைத்திருவாக்குகள் எழுந்தன வென்க. இனி, அப்பிரமப் பொருள் ஆன்மஞானத்தொடு சார்த்தி யங்ஙனம் அளந்தறிய முடியாதாயினும், தேவர்கள் பிரமத்தைத் தொட்டறிந்தார் களென ஆண்டாண்டு ஓதப்படுமாறு பற்றி மற்று அத்தேவர்களினு முயர்ந்தோனாய் விளங்குமவனே முழுமுதற் கடவுளென் றறிவோமெனின்; அவ்வாறு அறிவதூஉங் குறைபாடுடையதே யாமென்று பின் ஓருதாரணத்தின்கண் வைத்து விளக்குகின்றார். இங்ஙனம் ஆன்மஞானத்தானுந் தேவஞானத்தானும் பிரமப்பொருள் அறியப்படுவதன்றென்னு நுட்பந்தெரித்து ஆசிரியன் மொழிந்த ‘நான் அப்பிரமத்தை நன்றாயறிவேனென்று நீ நினைப்பையாயின் ஆன்மவியல் பொடு சார்த்திப் பிரமசொரூபத்தை நீ அறிவதூஉம், தேவர்களுடன் வைத்து அதன் சொரூபத்தை நீ அறிவதூஉம் உண்மையிற் நீ குறைபாடுடையனவாம்'என்னும் வாக்கியஞ் சைவசித்தாந்த நுணுக்கப் பொருளுரைத் தொழுகுமாறு காண்க. இவ்வுபநிடதக் கருத்தறியாது மாயாவாதப் பொருள் பற்றி எழுந்தவுரைக ளெல்லாம் மூலப்பொருளோடு இணங்காமன் மாறுகொண்டு மூலமொரு பக்கமும் உரை யொருபக்கமுமாய் ஒழிதல் காண்க.

இனியிதன் மேற் சீடனுரையாயெழுந்த ‘அவன் அறியப் படுபொருளென நான் நினைப்பதல்லாமல், அவனை நன்கு அறிவேனென்று நான் நினைக்கின்றிலேன்' என்னுஞ்சுலோகப் பொருள் ஒரு சிறிது ஆராய்வாம். ‘அவன் அறியப்படுபொருள்’ என்றதுணையானே ஆன்மஞானத்திற்கும் அவன் விளங்கற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/138&oldid=1574554" இலிருந்து மீள்விக்கப்பட்டது