உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

விக்கிரகங்கள்

மறைமலையம் 8 – 8

சகளமங்களோபா சனைக் கேதுவாய் முடிந்திடுதலால் அவை அவ்வாறிகழப் படாவென் றொழிக. ஈண்டு ‘இதுவென்று நினைந்து உபாசிக்கப்படும் அதனை அவ்வாறு நினையற்க' என்று வலியுறுத்தெழுந்த வாக்கியம், ஈசுரனை வழுத்துவதற்கு அமைந்த விக்கிரக சரீரங்களையே அவ்வீசுரனாகக்கருதற்க என்று அறிவுறுத்துதலை நுதலிற்று. இஃதுணரமாட்டாது தமக்கு வேண்டியவாறே யுரை யுரைப் பாருமுளர். அவர் கூற்றுப் பொருந்தாமை ‘சகளோபாசனை' யில் விரித்துக் காட்டி விளக்கினாம். ஆண்டுக்காண்க.

இனி, மாணாக்கன் ஐயந்திரிபின்றிப் பிரம சொரூப விலக்கணம் இனி துணர்ந்து கோடற்பொருட்டுச் ‘சொல்லினால் வெளிப்படுவதன்றாய்’ என்பது முதல் இக்கண்ட முடிவுகாறும் மேலுமேலும் வலியுறுத்தோதினார்.

இனி இம்முதற்கண்ட முதன் முடிவுகாறும் பிரமமென்பது தூலசூக்கும அசேதன தத்துவங்கட்கு அதீதமாய் அவற்றைத் தானியக்குவதன்றித் தானவற்றால் இயக்கப்படுவதன்றென்பது கூறினார். இனி இரண்டாங் கண்டத்தில் சூக்கும சேதன தத்துவமாகிய ஆன்மஞானத்தானும் அஃது அறியப்படுவதன் றென்ப துணர்த்துகின்றார்.

இனி இரண்டாங்கண்டத்து ளோதுமாறே பிரமம் ஆன்மஞானத்தானும் அறியப்படுவதன்றாயின் அங்ஙனம் ஓர் பரம்பொருள் உண்டெனக்கோடலாற் போந்த பயன் என்னை யோவெனின்; அங்ஙனம் பிரமம் ஒருவாற்றானும் அறியப் படுவதன்றெனல் அவ்விரண்டாங்கண்டத்தின் கருத்தன்று. ஆன்மஞான விருத்தியெல்லாம் உலகியற் புறப்பொருள் பற்றியே எழுகின்றன; அவற்றின் வேறாய் வருதல் காட்சிவகையானுங் கருத்துவகையானுந் துணியப்படவில்லை. அப்பெற்றித்தாகும் ஆன்மஞானத்திற் பரப்பிரமப்பொருள் கோசரிக்கும் என்று கோடுமாயின் அதுவும் அவ்வுலகியற் பொருளுளொன்றாக வேவைத்தெண்ணப்படுதலன்றிப் பிறிதாமாறில்லை. அல்ல தூஉம், ஆன்மஞானத்தின் வேறாயறியப்படுதலின்றி அவ்வான்ம ஞானத்தின் கண்ணுஞ் சூக்குமமாய் விளங்கும் இறை முதற் பொருள் அறியப்படாதென்பதே யிக்கண்டத்தின் கருத்தாவது. இக்கருத்துப்பற்றியே ஆசிரியர் மெய்கண்ட தேவநாயனாரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/137&oldid=1574553" இலிருந்து மீள்விக்கப்பட்டது