உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

111

யதுவாமென நீயுரைப்பின், அஃது அறியப்படாத பொருளையுங் கடந்து செல்வது' என்று கூறினார்.

இனித் தூலசூக்குமமாய்க்கிடக்கும் எல்லாத் தத்துவங்களை யுந் தனக்குப் பல்வேறு வகைப்பட்ட சரீரங்களாகக் கொண்டு அவற்றுள் அந்த ரான்மாவாய் விளங்கும் பிரமப் பொருளின் பெற்றி தேறாது, அச்சரீரங்களையே பிரமமாகத் துணிந்து வழிபடும் ஒரு சாரார் மதம்பற்றி ஆசங்கித்துச் ‘சொல்லினால் வெளிப்படுவதன்றாய்ச் சொல்லைத் தான் வெளிப்படுத்துகின்ற அந்தப் பொருளைப் பிரமமென்று நினைந்திடுக, இதுவென்று நினைந்து உபாசிக்கப்படும் அதனை அவ்வாறு நினையற்க'என்று வலியுறுத்து ஓதினார். என்னை? இது இது என்று சுட்டப்படுகின்ற பொருள்களெல்லாம் ஐம்பொறிக்கு விடயமாதன்மேலும் வரையறைப்படுங்கண்டப்

L

பொருள்களேயாம். சருவ வியாபகனாய் விளங்கும் ஈசுரனை அங்ஙனம் இதுஇதுவென்று கிளந்து சுட்டுதல் அமையா மையானும், செய்வானுக்குஞ் செயப்படு பொருளுக்குமுள்ள பேதமுணராது அவை யிரண் டனையும் ஒன்றென்று கோடல் இழுக்காமாதலானுமென்பது. அற்றேல், கல்லினாலுஞ் செம்பி னாலும் உருவங்கள் தாபித்துக்கொண்டு அவற்றின்கண் வழிபாடு இயற்றுதல் யாங்ஙனமெனின்; ஈசுரன் ஒரோர் அன்பர்க்கு அனுக்கிரகிக்கும் பொருட்டுத் தாங்கிவந்த சகளமங்கள அருட்கருணைத் திருவுருவ வடை யாளமாய்ச் செய்துகொண்ட அவ்விக்கிரகங்களெல்லாம் அவ்வீசுரனுக்குச் சரீரங்களாக வழுத்தப்படுதலால் அவை குற்றமாமாறு இல்லை. சாத்தா, கொற்றாவென்று அழைத்தவழி அவ்வப்பெயர்களை யுடையோர் எதிர்வந்து நிற்பக் காண்கின்றோம்; சாத்தன், கொற்றன் எனுஞ் சொற்கள் அவ்வவ் வான்மாவைத்தாங்கிய சரீரத்திற்கு இடப்பட்ட பெயர்கள்; சரீரத்திற்குரிய அச் சொற்களால் அழைத்தவழி அவற்றை யுடையரான சரீரிகள் வந்து நிற்குமாறு போல ஈசுர சரீரத்தின்கட்செய்யப்படுகின்ற வழிபாடுகள் ஈசுரன்மாட்டு எய்துதற்கு ஓரிழுக்கில்லை; அங்ஙனம் உபாசித்த லாலே ஈசுரன் சரீரமாமாறு இல்லை, சரீரம் ஈசுரனாமாறில்லை, ஈசுரன் ஈசுரனே சரீரம் சரீரமே, அவ்வா றாயினும் ஈசுரன் சரீரமாயும் நிற்பன். அவற்றின் வேறுமாயும் நிற்பனென்றுணர்க. இவ்வாறு கல்லினாலுஞ் செம்பினாலுந் தாபித்து உபாசிக்கப்படுகின்ற

வந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/136&oldid=1574552" இலிருந்து மீள்விக்கப்பட்டது