உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

விட

மறைமலையம் -8 8

யுணர்த்தி ஆசிரியன் விடையாய் எழுந்தன. அவற்றுள், செவியுனுட்செவியாயும்' என்னுஞ் சுலோகம் ‘அவனை விழியும் வாக்கு மனமுஞ்சென்று அணுகமாட்டா' என்றற்றொடக்கத்தன வாகவருஞ் சுலோகப்பொருள் வலியுறுத்தி யவற்றிற்கு ஓர் ஏதுவாய் நிலை பெறுகின்றது. விழி, வாக்கு, மனம் முதலிய கருவிகள் முதல்வனை அணுக மாட்டாமைக்கு ஏது என்னை யென்றாராயும் வழி, அவ்விழி வாக்கு முதலிய கருவிகளுக்கு டயமாகும் உலகியற்புறப் பொருள்போலாது அவ்விழி முதலியவற்றின்கண் உண்ணின்று விளங்குவான் முதல்வ னாகலின் அவை அவனை அறியமாட்டா வென்பதுபற்றி அவனை விழியும் வாக்கும் மனமுஞ்சென்று அணுகமாட்டா’ என்று அவ்வாறு தெளியவெடுத்தோதினார். புறப்பொருளைக் காணுங்கண் தன்னையுங் காணாது தன் உண்ணின்ற ஒளியையுங் காணாது; புறப்பொருளை யறியும் மனவுணர்வு தன்னையு முணராது தன் உண்ணின்ற ஆன்ம வுணர்வையு முணராது. எனவே ‘செவியினுட் செவியாயும் உள்ளத்தினுள் உள்ள மாயும் சொல்லினுட் சொல்லாயும் இருக்கும் முதல்வனை அவைகண்டுணர்தல் செல்லாதென்பது பெற்றாம். இக்கருத்தே பற்றி "அறிய விரண்டல்லனாங்கறிவு தன்னா, லறியப் படானறிவினுள்ளான்” என்னுஞ்சிவஞான போதத்திரு வாக்கும் எழுந்ததென்றுணர்க. இவ்வாறே “அவன் வாக்கி னாலும் மனத்தினாலும் கண்ணினாலும் பெறப்படு வானல்லன்” எனக் கடோபநிடதத்தினும் "கண்ணினாலும் வாக்கினாலும் மற்றைப் பொறிகளாலுந் தவத்தாலுங் கர்மத் தாலும் அவன் அறியப்படுவானல்லன் என முண்டகோப நிடதத்தினுங் கூறப்பட்டன. இது நிற்க.

இனி ஐம்பொறிக்கு விடமாகுந் மாகுந் தூலப்பிரபஞ்சம் போல்வதன்றிச் சூக்குமமாய்த் தூலப்பிரபஞ்சத்திற்குங் காரண மாயிருக்கும் மாயை முதலிய தத்துவங்களே மனம் முதலிய அக்கருவிகளை யியக்குமென்று கொள்ளாமோவெனின்; கொள்ளாம். சித்துப்பொருளின் சம்பந்தமின்றிச் சடப்பொரு ளொன்றையொன்று இயக்கும் என்பது காண்டலளவை விரோதமாகலானும், மாயை முதலான எல்லாத் தத்துவங்களையு மியக்குவான் முதல்வனே யென்பார் அறியப் படுபொருளின் அது வேறாக வுள்ளது; அற்றேல், அறியப்படாத பொருளே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/135&oldid=1574551" இலிருந்து மீள்விக்கப்பட்டது