உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

109

இயங்கமாட்டா. அறிவுடைய சித்துப்பொருள்கள் தாமே யங்குதலும் பிறவற்றை இயக்குதலுமாகிய இயல்பினை யுடையவாம். இந்த நியதிப்பாட்டாலே யாண்டேனும் ஒரு சடப்பொருள் தானே இயங்கக்காண்டுமாயின், அதனை இயங்கச் செய்யும் மற்றைப்பொருள் நமது கண்ணுக்குப் புலனாயிற்றில்லை என்பது யார்க்கும் விளங்கும். அங்ஙனம் விளங்காதாயினும் அதன் இருப்பை நிராகரித்தற்கு யாரும் ஒருப்படமாட்டார்.அப்பொருள் யாதென்று ஆராயமுயல்வார். அங்ஙனமே, ஒருவன் சரீரத்தின் கண்ணே மனம் முதலிய கருவிகள் இயங்கக்காண்டலால் அவற்றை யியக்குவது யாது என்று ஆராயலுறும் வேட்கை யுடையனான சீடன் அவ்வாறு வினாயினான். நன்று சொன்னீர், ஒரு சரீரத்தின் கண்ணே சோதனப்பொருளான ஆன்மாவிருத்தல் சிறுமகார்க்கும் அறியக்கிடந்ததொன்றாகலின், அதுவே அக்கருவிகளை இயக்குகின்றது என்பது அறிவோம், அதனின் வேறாக ஒன்றுள்ளதுபோல் வினாதல் பயனின்றாதலேயன்றி அறியாமையுமாமெனின் உயிரறிவு விளங்காது அயர்ந்து உறங்குங்காலத்தே பிராணன் முதலிய சில அகக்கருவிகள் சி இயங்கக்காண்டலானும், உயிரறிவு விளங்கி நிற்குங்காலத்தும் அவ்வறிவு அந்நின்றவாறேதான் நினைந்தாங்கு விளங்கி நில்லாது அறிவுமயங்கி உறங்குதலானும் அவ்வுயிரே அக்கருவிகளை யக்குமென்பது ஒருவாற்றானும் பெறப்படுமாறில்லை. அதுவன்றியும், பிராணன் முதலிய கருவிகளோடு உடங்கு இயைந்து நிற்பினல்லது அறிவு விளங்காத உயிர் அக்கருவிகளை அறிந்து இயக்குமென்பது ஒரு சிறிதும் பொருந்தாது. இங்ஙனம் அக்கருவிகள் தாமே யியங்காமையானும், அவற்றை யியக்குவது ஆன்மாவேயாமென்பது பொருந்தாமையானும் இவை யிரண்டு மல்லா முதல்வனே அவற்றை யியக்குவானென்பது பொதுவகை யானுணர்ந்து அம்முதல்வனியல்பு மேலும் அறிந்து கொள்ளும் பொருட்டுச்சீடன் அவ்வாறு வினாயினா னாகலின் அது வழுவாதல் யாண்டையதென்றொழிக. இவ்வாறு சீடன் முதல்வனிருப்பை ஒருவாற்றானுணர்ந்து வினாயினா னென்று கொள்ளாக்கால் அவன் வினாவிற்போந்த ‘எந்தக் கடவுள் கண்ணையுங் காதையுந் தத்தம் நிலையில் நிறுத்து கின்றார்? என்னும் வாக்கியம் பொருள்படுமாறில்லை. இனிப் பின்வருஞ் சுலோகங்களெல்லாஞ் சீடனுக்கு அக்கடவுட்பொருள் மெய்ம்மை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/134&oldid=1574550" இலிருந்து மீள்விக்கப்பட்டது