உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

108

சிவமயம்

திருச்சிற்றம்பலம்

ஸ்ரீஜ்ஞாநசம்பந்தகுருப்யோநம வாழ்த்து

“வாழ்க வந்தணர் வானவ ரானினம் வீழ்க தண்புனல் வேந்தனு மோங்குக ஆழ்க தீயதெ லாமரனாமமே

சூழ்க வையக முந்துயர் தீர்கவே"

ஞானசாகரம்

8. கேனோப நிடதக் கருத்துப்பொருள் விளக்கம்

பிருகதாரணியகோபநிடத முகவுரையிலே சங்கராசிரியர் உபநிடதம்' என்னுஞ்சொல்லை ‘உபநி’ ‘ ‘சத்’என்று பகுத்துக் காண்டு, அவற்றுள் ‘உபநி’என்பதில் ‘உப' என்பது அணிமை எனவும், ‘நி’ என்பது நிச்சயம் எனவும் பொருடருதலானும், ‘சத்’ என்பது ‘அழி’ ‘போ' எனப்பொருடருதலானும் அவ்வுப நிடதம் என்னுஞ் சொல்லுக்குத் திரண்டபொருள் 'இவ்வுலகி னையும் அதன் கண்வரும் அறியாமையினையுங் கெடுத்துப் பிரமத்தை அணுகுதல்’ என்பதேயாம் என்று உரைத்திட்டார். எனவே அறியாமை நீக்கி உலகைப் பற்றறத் துறந்து பிரமத்தை அணுகுதற்கு ஏதுவாகிய ஞானத்தைப்போதிப்பது உபநிடதம் என்று அவ்வாறு கோடலுமாம். இது நிற்க.

கட்ட

இனி இதன் முதற்கண்டத்தில் சீடன் வினவும் ‘எவராற் ளை யிடப்பட்டும்' என்னுஞ் சுலோகத்திலே 'பிரதம பிராணன்' என்றது முதன்முதல் அறிபொருளான ஆன்மா வுக்குச் சரீரத்தைத் தந்தருளி முதல்வன் சிருட்டி தொடங்கிய பண்டைக் காலத்தே தோன்றிய பிராணனேயாம். பிராண னென்றது பிராணவாயுவையன்று; உயிர் உடம்பகத்தே நிலைபெற்று இயங்குதற்கு ஏதுவாகிய தத்துவமேயாம்.

மனம், பிராணன், சொல், கண், காது முதலிய கருவி ளல்லாம் அறிவில்லாத சடப்பொருள்கள். சடப்பெருள் களெல்லாம் பிறபொருள்களால் இயக்கப்பட்டாலல்லது தாமே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/133&oldid=1574549" இலிருந்து மீள்விக்கப்பட்டது