உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

107

நாவலரவர்கள் ஒரோவிடங்களில் தொல்லாசிரியர் மெய்ம்மை வரம்பழித்துரைத்த வுரைகளையெல்லாம் ஆசங்கித் தெடுத்துக் கொண்டு நக்கீரனார் தெய்வப்புலமை மாட்சி என்னும் விஷயத்தின் கீழ் நின்று விரித்து விளக்குவாம் அங்ஙனஞ் செய்வுழியெல்லாம் நாவலரவர்களிடத்து உண்மை நட்புரிமை பாராட்டியே யே செய்வாமல்லது, அவர்களிடத்துப் பகைமை, அழுக்காறுமுதலிய இழிகுணவயத்தாற் செய்வோமல்லோம் என்பது கருத்தடைக்கும்படி அவர்களையும் பிறரையும் வேண்டு கின்றோம். இது நிற்க. ஈண்டுவிரித்த காரணங்கள்பற்றியே, பண்டிதர்சவரிராயரவர்கள் களவியல் பாயிரவுரைகூறினார். முசிறியாசிரியர் நீலகண்டனாரென்னுங் கருத்தின்கண் யாமொரு கருத்தின்கண்யாமொரு மைப்பாடு பெரிதுடையமாயினோம். இது கண்டு கூறிய நம் ஆப்தரவர்கள் நுட்ப மதியை மிக வியக்கின்றோம். இதுகிடக்க.

இனி, இதன்மேற் பண்டிதரவர்கள் களவியல் பாயிர வுரையில் தொல்காப்பியப்பொருளதிகாரத்தைக் குறித்து ஒன்றும் பேசப்படாமையால் கடைச்சங்கத் தொடக்கத்தில் அவர் ஆராய்ச்சிக்குத் தொல்காப்பியங் கிடைத்திலது என்று யூகஞ் செய்தார்கள். அற்றேல், ஆசிரியர் நக்கீரனார் தம்முரை யிலாங்காங்குத் தொல்காப்பியப் பொருளதிகாரச் சூத்திரங்கள் மேற்கோள்காட்டி அப்பொருளதிகார நுட்பமெல்லாந் தாம் விரிவாய் மொழிந்து தம்முரை விழுப்பந்தோற்றுவிக்கக் காண்டலின், அவராராய்ச்சிக்குத் தொல்காப்பியம் அகப்படிலது என்றுரைத்தல் ஒரு சிறிதும் பொருந்தாது. அற்றன்று, அக் காலத்துவழங்கிய பொருளதிகாரச்சூத்திரங்கள்

ஒரோ

வொன்றைத் தம்முரையில் மேற்கோளாக மொழிந்து உரை யுரைத்தாரென லாகாதோவெனின் நன்றுசொன்னாய். பொரு ளதிகாரம் வல்லராகாத அவர் ஒரோவொரு சூத்திரங்கள் பற்றியே அப்பொருளதிகார நுண்பொருளெல்லாம் ஒருங் குணர்ந்து மிகச் சுருங்கிய அவ்விறையனார் களவியலுக்கு மிகவிரிந்த விழுமிய நல்லுரை கண்டருளினாரென்றல் உலக வழக்கில் தமிழ் கல்விவளஞ்சுருங்கிய தன்றெனலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/132&oldid=1574548" இலிருந்து மீள்விக்கப்பட்டது