உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

– 8

மறைமலையம் 8

கூறித்தம்மைப் புகழ்ந் தெடுத்தல் என்னையெனக் கடாயினார்க்கு இறுக்கலாகா மையானும், தாமெழுதிய நூலுரையைத் தாமே புகழ்ந்து பாயிரமுரைத்தல் வட நூலாரிடைக்காணப்படுதல் பற்றி அதனைத் தமிழ் நூலார் மேலும் ஏற்றிவிடுதல் பொருந்தா தென்பதற்குத் "தோன்றா தோற்றித் துறைபல முடி ப்பினுந், தான்றற்புகழ்தறகுதியன்றே” என்னும் விதியே கரிபோக்கு மாதலானும் பாயிரவுரை நக்கீரனார் உரைத்ததன்றென்று துணிக. நக்கீரனாருரை கேட்டுவந்த பரம்பரையிலுள்ளாரான

நீலகண்டனார்தாமே யவ்வுரைக்குப் புறமாகப் பாயிரவுரை யெழுதினாரென்க. என்னை? நூலுரைத்தபின்றை அதன் வரலாறுதெரிப்பப் பாயிரவுரை செயப்படுதலே தொல் லாசிரியர்மரபாதலானும், இதனுட்ப மெல்லாம் ஒருங்குணர்ந்த ஆசிரியர் சிவஞான யோகிகளும் சூறாவளியிற் "பாயிரம் நூல்செய்த பின்னர்ச் செயப்படுவ தாகலின் என்று வரம்புகோலி யுரைத்தலானு மென்பது. இங்ஙனம், இறையனார் களவிய லுரைகண்டார் தெய்வப்புலமை நக்கீரனாரென்பதூஉம், அந்நூலுரைவரலாறு தெரிப்பப் பாயிரவுரைகண்டார் அவர் பரம்பரையில்வந்த நீல கண்டனா ரென்பதூஉம் நன்குணர்ந் தன்றே ஆசிரியர் சிவஞானயோகிகள் கேட்போன் 'யாப்பு’ என்பவற்றிற்கு நீலகண்டனாருரைத்த உரைப் பொருளை மறுத்துத் தொல் காப்பியச் சூத்திர விருத்தியிற் சிறந்ததோர் பொருள்காட்டித் தம்முரை நிறுத்துவா ராயினதூஉமென்க. ப்பெற்றிதேறாத ஸ்ரீமத்சபாபதி நாவலரவர்கள் பாயிரவுரை நக்கீரனா ருரைத்ததே யாமென மருண்டு அதனை அவ்வாறே பிறழக் கொண்டு நக்கீரனார் தெய்வப்பெற்றியுடையராகாத காலத்தே களவியலுக்கு உரைகண்டாராகலின், அஃதுணர்ந்து ஆசிரியர் சிவஞான யோகிகள் அவ்வுரைப் பொய்ம்மைகாட்டி மறுத்திட்டாரெனத் திராவிடப்பிரகாசியையில் தெய்வப்புலமை நக்கீரனார்க்கு அளவிறந்த குற்றங்கூறிப் பெரிதுமிடர்ப்படு வாராயினார். ஆசிரியர் சிவஞானயோகிகள், நாவலரவர்கள் கூறுமாறு வேதவழக்கும் ஆன்றோர் ஆசாரவரம்புங் கடந்து தெய்வப்பெற்றியுடையரான நக்கீரனாருரையைப் பழித்துப் பெரியதோர் அபசாரம்புரியும் நீரரல்லர். அப்பெரியார் களவியல் பாயிரவுரை நக்கீரனாருரைத்ததன்றென்னுந் துணிபுபற்றியே அதனை மறுக்க முந்துற்றார். இவ்வாறே ஸ்ரீமத்சபாபதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/131&oldid=1574547" இலிருந்து மீள்விக்கப்பட்டது