உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

மறைமலையம் லயம் – 8

வோனுமாவன். பிரமஞானிகள் இவனை இதனின் வேறாக வுணர்தலாற் பிறப்பினின்று விடுபட்டுப் பிரமத்தின்கண் அழுந்தி ஒன்றாய் ஆண்டெழுந்த தியானவுறைப்பிற் சலிப்பின்றி நிற்கப்பெறுவர்.

(7)

பிரிப்பின்றி நிற்குங்கால் விளங்கியும் விளங்காமலும் அழிந்தும் அழியாமலுமிருக்கும் இவ்வுலகத்தை ஈசன்றாங்கு கின்றான். அநீசனான ஆன்மாவானவன் போக்தாவாய் அநுபவிக்கின்ற முறைமையினாலே தளைக்கப்படுகின்றான். முதல்வனையறியு மறிவாலே அது சருவபாசங்களினின்றும் விடுபடுகின்றது.

(8)

அவற்றுள் ஒன்று ஞானவுருவாயுள்ளது, மற்றையது அஞ்ஞானவுருவாயுள்ளது; ஈசன் அநீசன் இருவரும் பிறவாதவர். அங்ஙனமாயினும் ஒன்று எல்லாம் வல்லது மற்றையது அவ் வாறாகாதது. உலகவியற்கை நுகர்வோனும் நுகரப்படுவன வற்றோடுங்கூடிப்பிறப்பின்றி யுள்ளது. ஆன்மாக்கள் அனந்தம், விசுவ சொரூப முடையமையினான் முதன்மையில்லாதன. இங்ஙனம் பிரமந்திரிவிதமாயுள்ள தன்மையுணரவல்லான் பாபங்களினின்று விடுபடுகின்றான்.

(9)

பிரதானம் அழிதலுறுவது, அரன் அழிதலும் மரணமு மில்லாதவன். அழிதலுறுகின்ற இயற்கையினையும் ஆன்மா வினையும் ஒரே தேவனான ஈசனே ஆளுகின்றான். அவனையே தியானித்தலானும் அவனோடு யோஜித்து ஒருமை யுறுதலானுந் திரும்பத் திரும்பத்தன்னையுண்மையுருவாக நினைதலானும் விசுவத்தின் கண்ணாகவரும் மாயங்கள் அகலுகின் றன.

(10)

தேவனை யறிதலாலே சருவபாசங்களும் அழிதலுறு கின்றன. பிறப்பு மிறப்பும் எல்லாவிதத் துன்பங்களுங் குறைய ஒழிகின்றன. அவனை உலகுரு வாகத்தியானித்தலால் ஒருவனுக்குத் தேகத்தைப் பிரிகின்ற காலத்து மூன்றாவதான விராட்புருடனுடைய விசுவ ஐசுவரிய சக்தியானது பெறப்படு கேவலமாகத் தியானித்தலாலே ஒருவன்றான் வேண்டுவன வெல்லாம் எய்துகின்றான்.

கின்றது.

(11)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/147&oldid=1574563" இலிருந்து மீள்விக்கப்பட்டது