உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

123

உலகினை யிறந்து நின்ற அப்பிரம சொரூபத்தை நித்தியமென்றும் ஒருவன் ஆன்மாவினுள்ளேயே யிருப்ப தென்றும் நினைதல் வேண்டும். இவனிற் பிறிதாக உணரப்படுவதொன்றுமில்லை. நுகர்வோனையும் நுகரப்படு பொருளையும் நுகர்விப்போனையும் அறிந்து, இவ்வாறு சொல்லப்பட்ட இம்மூன்றெல்லாம் பிரமமென் றுணர்வோன் முத்தியடைகின்றான்.

(12)

விறகினுண் மறைந்து நின்றவழித் தீயின்றன்மையும் அத்தீயின் சூக்கும அனற் கொழுந்தின் அழிவுங் காணப்படாத வாறுபோலவும், தேய்த்துக் கடைந்தவழி அதன் கண்ணே அதுதிரும்பத் திரும்பக் கட்புலனாய் விளங்குமாறு போலவும், இங்ஙனம் இரண்டுங்காணப்படுதலும் படாமையும் போலவும், ஆன்மாவானது பிரணவத்தாற் சரீரத்தினுள்ளே காணப்படும்.

(13)

ஒருவன் தன் சரீரத்தைக் கீழரணியாகவும் பிரணவத்தை மேலரணியாகவுங் கொண்டு தியான முதிர்ச்சிப் பெரும் பழக்கத்தால் தேய்த்துக்கடையவே மறைந்து நிற்கும் ஈசுரன் அனற் பிழம்பு வெளிப்பட்டுத் வளிப்பட்டுத் தோன்றினாற்போல விளங்கித்

தோன்றக்காண்பன்.

(14)

எள்ளின்கட் பிழிந்தெடுத்த எண்ணெயும் மோரின்கட் டிரட்டிய வெண்ணெயும் நிலனகழ்ந்து வருவித்த ஆற்றினூற்றும் ஞகிழி ஞAN கடைந்து பொத்தியதீயும் போல் அந்தப்பரப்பிரமப் சத்தியக்கண்ணானுந்தவவிசேடத்தானுந் மாட்டு விளங்கித் தோன்றா

பாருளானது

தன்னைக்காணவல்லோன்

நிற்கும்.

(15)

பாலிற் பரந்தவெண்ணெய் போலவும் ஆன்மவறிவுந் தபோமூலமும் போலவும் யாண்டும் விரிந்து வியாபிக்கும் ஆன்மா யாது அது பிரமம், அதன் மேல் எல்லாவற்றின் அந்த முஞ்சார்ந்து நிற்கின்றது,

முதலத்தியாயம் முடிந்தது

(16)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/148&oldid=1574564" இலிருந்து மீள்விக்கப்பட்டது