உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124

  • மறைமலையம் - 8 8

இரண்டாம் அத்தியாயம்

உண்மைப் பொருளைப்பெறும் பொருட்டாகப் பிரமத்தில் மனத்தையும் ஐம்புலவுணர்வையும் ஒருக்கிக் கொண்டு சாவித்திரி அனற்சோதியைக் கண்டிருத்தலால் அதனை இந்நிலவுலகத்தினுங் கொண்டுவருக.

(1)

தைவிகமுள்ள சாவித்திரியின் திருவருளால் ஒடுங்கிய வுள்ளத்துடன் எம்முடைய ஆற்றலுக்கு இசைந்தவாறு வானுலகு பெறக்கடவேமாக.

(2)

வானுலகு பெறுதற்கு ஏதுவான ஐம்பொறிகளையும் உள்ளத்தோடும் உணர்வோடும் யைவித்து, அவை அளவில்லாத தெய்வத் துளங்கொளிவிரிக்குமாறு சாவித்திரி செய்க.

(3)

தம்முள்ளத்தையும் ஐம்பொறியுணர்வையும் ஒருவழி நிறுத்திய விப்பிரரால் யாககருமங்களை ஒழுங்கு செய்தவளும், அறிவுள்ள எல்லா உயிர் வருக்கங்களையும் அறிபவளும், வரையறையின்றி யாண்டும் வியாபித்த ஞானமகளுமான சாவித்திரிக்குப் பெரும்புகழ் உரியதாக.

(4)

உமதுபண்டைப் பிரமத்தைப் பயபத்தியோடு வணங்கு கின்றேன்; நல்வழிச் செல்லும் நல்லோர் போல என் சுலோகங்கள் புகழப்படும்; தேவவுலகங்களில் வசிக்கின்ற அமிர்த புத்திரர் எல்லாருங் கேட்பாராக.

(5)

தீமூட்டப்பட்டிருப்பதும் வாயு வொலிப்பதும் சோம இரசந்தங்கியிருப்பதுமான வேள்விக் களத்திலே உள்ளஞ்சென்று ஒருங்குகின்றது. சாவித்திரியினால் படைப்புக் கடவுளான பிரமத்தை அறிந்து ஏத்துமின்கள்; அவனிடத்தே மனம் ஒருங்குப்புகுந்து மின்கள்; நும்முன்னைக் கருமங்கள் உங்களைத் தடைசெய்யமாட்டா.

(6)

சரீரத்தின் மற்றையுறுப்புக்களுக்கு இசைய மேலுறுப்புகளை நேரொக்கப் பிடித்து, இதயத்தினுள் உள்ளத்தினோ டைம்பொறி யுணர்வையும் அடக்கி அறிவுடையோர் பிரமப் புணை பற்றிக்கொண்டு உக்கிரமான புனற்பெருக் கெல்லாங் கடந்து செல்வாராக.

(7)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/149&oldid=1574565" இலிருந்து மீள்விக்கப்பட்டது