உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிராணனைக்

ஞானசாகரம் கீழ்ப்படுத்தி

125

அவர்களை யறுத்து நாசிகளின் வழியே மெல்லென உயிர்த்துத்தேர்ப்பாகன் துட்டக்குதிரை களிழுக்கும் இரதத்தினையே நோக்குமாறு போல அறிவுடையோர் தம்மனத்தினையே நோக்கிக் கொண்டு இருக்கற்பாலார்.

(8)

கூழாங்கற்கள், தீ, வாலுகம் முதலியனவின்றிச் சமனொத்த தாய், ஒலிகளானும் நீர் நிழலானும் மனத்திற்கு இன்பம் பயப்பதாய்க் காட்சிக்கு வெறுப்பாவதின்றி யுள்ள நிலத்திற் காற்றினியக்கமில்லாதான ஓர் முழைஞ் சிற்புகுந்து ஒருவன்

தன்மனத்தை ஒருக்கக்கடவன்.

(9)

பிரமம் அபிவியக்தியுறுதற் கேதுவாகிய யோகத்திற்குமுன் இவ்வுருவங்கள் வேண்டப்படுகின்றன; உறைபனி,புகை,தீக்காற்று, காற்று, தீ, மின்மினிப்பூச்சி, மின்னல், பளிங்கு, திங்கள் முதலான வடிவங்களை அப்பிரமம் மேற்கொள்ளுகின்றது. (70)

நிலம், நீர், ஒளி, வளி, ஆகாயங்களின் தொகுதியாதலின் யோகத்திற் கடையாளங்களான ஐவகைக் குணங்களும் புலனாய்த் தோன்றுங்கால், ஆண்டு நோயு முதுமையுந் துன்பமும் யோகாக்நிமயமாய் விளங்கும் அவன் சரீரத்திற்கு வருதலில்லை.

(11)

சரீரம் லேசாகவும் ஆரோக்யமாகவும், மனம் அவாவில்லாமலும் வண்ணம் பிரகாசமாகவும் குரலினிதாகவும் மணம் கறிதாகவும் மூத்திர புரீடங்கள் குறைவாகவும் விளையுங் காலத்து யோகமார்க்கத்தின் முதற்பாதம் சித்தித்ததென்

றுரைக்கின்றார்கள்.

(12)

மண்மூடப் பட்டதோர் துண்டைத் துடைத்துத் தூய்தாக்கியவழி ஒளி விரிந்து விளங்கியவாறுபோல, மாசுபொதிந்த உயிர் தன் உண்மைத் தன்மை இனிதறிந்தவழி ஒன்றாய் உண்மைப் பெரும்பேறெய்தித்துன்பங்களினின்று விடுபடுகின்றது.

(13)

இவ்வியோக சமாதியின் கண்ணே அழுந்தப்பெறுகின்ற விடத்துத் தன்கட்சோதியாய் விளங்கப்பெறுந் தன் ஆன்ம வுண்மைத் தன்மையோ டொட்டித்தத்துவாதீத நித்தியமான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/150&oldid=1574566" இலிருந்து மீள்விக்கப்பட்டது