உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

127

எல்லாக் கருணையு நிரம்பிய அக் கோலத்தோடு மலையிலிருந்த வாறே நலந்தருவோனே! எம்மைக் கடைக்கணித்திடுக.

(5)

மலையிலிருந்தவாறே நலந்தருவோனே! சீலர்கண்மேல் விட்டெறிய நின் கரத்திற் பற்றியிருக்குங்கணையை நீ மங்கல முடையதாக்குக. காவலோய் மனிதனுக்கும் உலகிற்கும் தீங்கு செய்யற்க. (7)

உலகத்தினும் பெரிதாய்ப் பரம்பொருளாய் அகண்ட மாய் எல்லாவுயிர்களின் சரீரங்கட்கேற்ப அவைகளினுள்ளொளிந் திருப்பதாய்ச் சருவவுலகங்களினும் வியாபகமாய் முதல்வனா யுள்ள பிரமத்தை அறிகின்றவர் மரணத்தைக்கடக்கின் றார்கள்.

6

(7)

இருளுக்குப்பின் விளங்கும் ஞாயிறுபோன்ற அந்த முழுமுதலகண்ட சித்துப்பொருளை நானறிகின்றேன். அவ்வாறு அவனை யறிதலால் ஒருவன் மரணத்தைச் செயிக்கின்றான். முத்திப்பெரும்பேறெய்துதற்கு வேறுவழியில்லை.

(8)

எவனைக்காட்டிலும் பெரியதில்லையோ எவனைக் காட்டினுஞ் சிறியதில்லையோ எவனிலும் பழையதில்லையோ எவன்தானொருவனேயாய் முத்தியுலகில் அசைவற்ற மரம்போல் நிற்கின்றானோ அவனால் அம்முழுமுதற்சித்துப் பொருளால் இவையெல்லாம் வியாபிக்கப்படுகின்றன.

(9)

அவனை அதன் காரணத்திற்கு வேறாகவும் உருவமுந் துன்பமுமில்லாதாகவும் உணருகின்றவர்கள் மரணத்தைக் கடக்கின்றார்கள்; ஏனையோர்க்குத் திரும்பத்துக்கமே வகுக்கப்பட்டிருக்கின்றது.

(10)

சருவ ஆனனங்களுஞ் சருவ சிரங்களுஞ் சருவ கிரீவங்களும் அவனேயாம்; சருவபூதங்களின் இதய குகையிலே அவன் வசிக்கின்றான், யாண்டும் வியாபிக்கின்றான் பகவானா யிருக்கின்றானாதலாற் சிவன் சருவஞ்ஞனாம்.

(11)

அவன்மகான், பிரபு, முழுமுதல்வன், எல்லாவற்றிற்கும் பிரேரகன், நின்மலானந்தத்திற்குத் தலைவன், சோதியன், நித்தியனாம்.

(12)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/152&oldid=1574568" இலிருந்து மீள்விக்கப்பட்டது