உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128

❖ LDMMLDMELD - 8 *

மறைமலையம் லயம் –

ஒவ்வொரு மனிதனுடைய இதயத்தின்கண் வசிக்கின்ற வனும் அறிவை நெறிப்படுத்துகின்றவனும், இதயத்தானும் மனத்தானும் பொதிந்து வைக்கப்பட்டவனும் முழுமுதற் சித்துமான அந்தரான்மா அங்குட்ட மாத்திரையாக விருக்கும் புருடனேயாம்.

(13)

உலகமியாங்கணும் வியாபித்து நிற்கும் முழுமுதல்வன் ஆயிரஞ் சிரங்களும் ஆயிரங்கண்களும் ஆயிரம் பாதங்களு முடையனாய் இதயத்தின் உந்திக்குப் பத்தங்குலத்தின்மேல் வசிக்கின்றான்.

(14)

இருக்கின்ற எல்லாவற்றிற்கும், இருந்த அவ்வெல்லா வற்றிற்கும், இருப்பனவற்றிற்கும், உணவால் வளருகின்ற வற்றிற்கும், மரணமில்லா நித்தியப்பொருளுக்கும் அம்முழு முதல்வன் இறைவனாம்.

66

‘ம-ள-ளஸ்ரீ ஞானசாகரம்” பத்திராதிபரவர்கட்கு

ஐயா!

இக்கடிதத்திற்குத்

தங்களரும்பத்திரிகையின்

மூலையிலிடந்தந்துவகரிக்க வேண்டுகிறேன்.

ஓர்

சித்தாந்த தீபிகை ஐந்தாம்புத்தகம் பிப்ரவரி மார்ச்சு மாதத்திய 9.10 சஞ்சிகையில் ஓர் கடிதர் கடவுள்கருப்பவழிப் பிறந்திறத்தலுக்கும் சிலாலிங்கமுதலியவிடங்களில் தோன்றி மறைதலுக்கும் பேதமில்லையென்றும், கருப்பவழிப் பிறந்திறத்த லினால் கடவுட்டன்மைக் கிழுக்காதென்றும் மற்றுஞ் சில மாறுபடுங் கருத்துகளையும் வெளியிட்டுள்ளார். அதைக் கண்ணுற்ற எமக்குண்டாய மயக்கநீக்குதற்பொருட்டுக் கீழ்வரும் வினாக்கள் நிகழ்த்தப்பட்டன. வேதாகம சாஸ்திரபுராண விதிகாசங்களின் உண்மைப் பொருளுணர்ந்த மேலோர் அவ்வினாக்களுக்குப் பிரமாண சகிதமாய் விடையெழுதி யுபகரிப்பாரென வேண்டுகின்றேன்.

1. கருப்பாசயத்திற்றங்கிப் பத்துமாதம் வளர்ந்து யோனிவழிப்பிறந்திறத்தலுக்கும் சிலாலிங்கம், மரத்தம்பம், கற்றூண், ஆகாய முதலியவிடங்களிலிருந்து தோன்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/153&oldid=1574569" இலிருந்து மீள்விக்கப்பட்டது