உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

129

மறைதலுக்கும் வித்தியாசமில்லையா? இல்லையெனில் அதற்குச் சுருதிப் பிராமாணமென்னை? உண்டெனில் அதுயாது?

2. ரண்டுஞ் சமமெனில் சாஸ்திரங்களில் யோனிவாய்ப் பிறத்தலுக்கு மாத்திரம் ஆசௌசம் (தீட்டு) விதித்துச் சிலாலிங்க முதலியவற்றில் தோன்றுதலுக்கு அங்ஙனம் விதியாததென்னை?

3. பரம்பொருளாயுள்ள கடவுள் கருப்பாசயத்திற் றங்கி யோனி வழிப் பிறந்திறக்கலாமா? பிறந்திறக்கலாமெனில் அப்போது கடவுளுக்கும் ஜீவாத்மாவுக்கும் வித்தியாசமென்னை? பிறந்திறக்கலாமென்பதற்குச் சுருதிப்பிரமாணம்

யாது?

பிறக்கின்றவர்கள் ஜீவர்களென்றும் பிறப்பிக்கின்றவர் கடவுளென்றும் வருஞ் சாஸ்திரக்கருத்துப் போங்கதியென்னை?

4. கருப்பாசயத்திற் றங்கிவளர்ந்து ஜனனாவஸ்தைப் பட்டுப் பிறந்து இறத்தல் கடவுளிலக்கணமாமா? ஆமெனில் அதற்குச் சுருதிப் பிரமாணம் யாது? கருப்பத்தில் வளர்ந்து பிறக்கு

முருவம் மாயாகாரியம். கடவுளெடுக்கும் உருவமும்

மாயாகாரியமாமோ?

5.

உலகில்

ல்

தருமத்தை நிலைநிறுத்தல்வேண் டி பரம்பொருளாயுள்ளவர் கருப்பவழிவரும் மாயாகாரிய தேகந் தாங்கி அறிவறியாமைகளின் வயப்பட்டுச் சுகதுக்கங் களில் மொத்துண்டுழன்றே நிலைநிறுத்தவேண்டுவது ஆவசிய கமோ? வேறுவழிகளிலங்ஙனஞ் செய்யமுடியாதா?

6.ஏகதேசமின்றி எல்லாப்பொருள்களிடத்தும் அருவமாய் வியாபித்துத் தோய்வறநிற்குங் கடவுளது சர்வவியாபகதர்மத் தோடு, கருப்பத்திலுருவெடுத்து ஏகதேசப்பட்டு வசித்தலையுஞ் சமப்படுத்திக் கூறலாமா? கூறலாமெனில் அதற்குப் பிரமாணம் யாது?

7. திரிமூர்த்தி பேதம் சுருதியாதிகளிற் கேட்கப்பட வில்லையா? அம்மூர்த்திகளும் ஆன்மாக்களேயென்பதும் அவர்கள் சிவாராதனமகிமையால் சிவாநுக்கிரகம்பெற்று அந்த அதியுன்னதபதவிகளையடைந்து லோகவுந்திதர்களாகி லோகா நுக்கிரகத்தின் பொருட்டுச் சிருஷ்டியாதி முத் தொழில் நடத்து வார்களென்பதும் வேதபடிதமல்லவா? ம்மூர்த்திகள் லயோற்பத்தி காலங்களில் முறையே ஒருவரிலொருவர் ஒடுங்கியும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/154&oldid=1574570" இலிருந்து மீள்விக்கப்பட்டது