உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130

மறைமலையம் -8

இவரே

ஒடுங்கினமுறையே யுதித்தும் வருவரென்பதும் இந்த நியாயத்தால் அவர் தம்மிற்றாரதம்மிய முடையாரென்பதும் வேதாகம புராணாதிகளிற் பெறப்பட வில்லையா? திரிமூர்த்தி களுக்கு மேலகத்துரியமூர்த்தியொருவர் உபநிடதங்களிற் கேட்கப்பட வில்லையா? அவருக்கு உமாசகாயத் துவாதி யடையாளங்கள் அவ்வுபநிடதங்களிற் படிக்கப்பட வில்லையா? நான்காவது பொருளும் (சதுர்த்தம்) குணாதீதரும், திரிமூர்த்தி சேவியருமாயிருந்து தமது சத்தியால் 'திரிமூர்த்தி களை யதிஷ்டித்து முத்தொழில் நடாத்தும் பரமகாரணராகிய த்யேயப்பொருளாவரென்று சுருதியாதிகளில் துதிக்கப்பட ல்லையா? இத்துரியமூர்த்தியே போகமோக்ஷப் பிரதாய கரென்பதும் போகமளிக்குமுறையில் தம்மை வழிபடுமான் மாக்களெண்ணியாங்கு அவரவர் பக்குவத்துக்கீடாக அவர்களை யீஸ்வரராம்படி யுயர்த்தி உலகந்தொழ நிற்கக்செய்யும் அதியுன்னத போகங்களை ஆன்மாக்களுக்கு வைத்தருளுவ ரென்பதும் வேதாகமங்களிற் கூறும் உண்மையன்றோ? இங்ஙனம் பழமையாயுள்ள வேதாகம சாஸ்திர புராணாதி களிலேயே மூர்த்திபேதம், அவர்கள் தாரதம்மியம், தவத்தாலவர் களுயர்ந்து உலகந்தொழநிற்குந் தன்மை, அவரவர் தத்துவநிலை முதலியவைகள் நிர்ணயித்திருக்குமெனில் இப்பேதங்கள், ஒருவர்மேலொருவரை யுயர்த்தி மகிழுந் துராசையால் பிற்காலத்துச் சைவர்களால் கற்பித்துக்கூறல் வழக்கமென்று அக்கடிதர் சைவர்களையிழுத்து நிந்தைகூறியது அவருக்கு நீதியாமா?

8.பிரமாணவாயிலானன்றி அபிமானங்காரணமா யவரவர் மனம் போனவாறெல்லாங் கூறுங் கருத்துகள் உண்மையுணரும் விருப்பமுடையோராற் கொள்ளற்பாலனவாமோ?

தினகரன்

சகளோபாசனை

இதுவென்று சுட்டியறியப்படுவதன் றாகலானும், அவன் அன்பர்க்கு அனுக்கிரகிக்கும் பொருட்டுத்தரித்து வரும் அருட்கருணைத் திருக்கோலம் அவன் சருவ வியாபக முழுவதூஉம் இயைபுடைய தாகலானும் அஃது அவைபோல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/155&oldid=1574571" இலிருந்து மீள்விக்கப்பட்டது