உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

131

வரையறைப்படுங்கண்டப் பொருளன்று; மற்றவரையறைப் படாது விரிந்த அகண்டப்பொருளேயாம். இவ்வாறாகலின், வாக்கு மனாதீதமான அப்பரம்பொருள் அவ்வாக்கு மனத்திற்கு எளிவந்து கோசரித்தலாற் போந்த இழுக்கொன்றுமில்லை யென்றுணர்க. அற்றன்று, வாக்கு மனத்திற்குப் புலனாம் பொருளெல்லாம் அழியக் காண்டலால் அங்ஙனம் மனத்திற்கு விளங்கித் தோன்றும் அக்கருணைத் திருவுருவும் அழிதல் வேண்டும், அழியவே விகாரமின்றி யிருக்கும் ஈசுரன் விகார மெய்தினானென்று கொள்ளப்பட்டு மாறுபாடாமெனின்; மாறுபாடில்லை. L மனத்தினாற் பற்றப்படும் உலகியற் பொருண்மாத்திரமே அங்ஙனம் அழியக்காண்டு மன்றி, அறிபொருளாய் உலகியற் பொருளைக்கடந்து செல்லும் பிரமப்பொருளும் அங்ஙனம் அழிதல் வேண்டுமென்னும் யாப்புறவு அதனாற் பெறப்படாமையின் அவ்வாறு கூறுதல் அடாதென்றொழிக.மேலும், மனத்திற்குப் புலனாம் அத்துணையே பற்றி உலகியற்பொருளையும் உலகினை யிறந்து நின்ற பிரமப்பொருளையும் ஒன்றென்று கூற ஒருப்படுதல் பெரிதும் ஏதமா மென்று மறுக்க. மனவுணர்வின்கட் கோசரிக்கும் ஈசுரன் கருணைத்திருக்கோலம் அவன் சருவ வியாபக முழுவதூஉம் இயைபுடையதா மென்பதற்குப் பிட்டுவாணிச்சி பொருட்டு ஒட்டவேடங்கொண்டு எழுந்தருளிய பெருமான் றாங்கிய பிரம்படி சராசரப் பிரபஞ்சங்கள் யாண்டும் பட்ட அற்புத சரிதமே கரிபோக்கி யினிது விளக்கு மென்க. இச்சரித மெய்ம்மையில் ஐயுறவுகொள யாரும் இடம்பெற மாட்டா ரென்பது மேலே சரிதவியல் வாழாமை யுரைத்து நிறுத்தினாம்; ஆண்டுக்காண்க. அற்றேல், வாக்குமனாதீதன் என்று அவ்வாறு ஈசுரனை ஓதியது தான்என்னை யெனிற் கூறுதும். பாச வழிப்பட்டுச் சீபோத முனைப்பால் ஈசுரனையாமறிந்து வழிபட மாட்டுவேமென்று தருக்குவார்மனவுணர்வுக்கு ஒருவாற் றானுங்கோசரிப்பதின்றிப்பரந்து பட்ட வியாபக முழுமுதன்மை யுடையனாகலின் அவ்வாறு சொல்லப்பட்ட தென்க. அருள்வழிப்பட்டுச் சிவபோதமுனைப்பாற் சிவகரணங்களாய்த் திரிந்த மனத்தின் கண்முதல்வன் விளங்கியவழித் தருக்கறுந்து சலனமின்றி யின்பநுகர்ந்து கிடக்குஞ் சீவன்முத்தர்க்கு அவன் கருணைத் திருக்கோலங் கோசரமாதல் ஒருதலையா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/156&oldid=1574572" இலிருந்து மீள்விக்கப்பட்டது