உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

மறைமலையம் லயம் - 8

மென்றுணர்க. எனவே, வாக்குமனாதீதமான சிவபரம்பொருள் நெக்குநெக்குக் குழைந்துருகு மெய்யன்பர் திருவுள்ளத்தின்கட் கோசரிக்குமாறு பற்றிவரக்கடவதோர் இழுக்கில்லை யென்பதூஉம், இழுக்கின்றாகவே உருவத்திருமேனியிற் காண்டு வழிபாடியற்று மன்பர்க்கு மனவொருமையுண்டாய் அத்துவிதமுத்திப் பெரும்பேறு சித்திக்கு மென்பதூஉம் பெறக்கிடந்தவா றுணர்க. இதுகிடக்க.

இனி உலகமியாங்கணும் பரந்துபட்டுக்கிடக்கும் மக்கட் பரப்பில் நாகரிக விருத்தி மிகப்பெற்றுடையோர் முதல் அநாகரிகப் பெருக்கத்தால் விலங்கினத்தோ டொப்பவைத் தண்ணப்படும் மாக்களீறாக யார்க்கும் இறைவனுளன் என்னும் உணர்ச்சியும், அவ்வுணர்ச்சியோடு உலகத்தின்கட் காணப்படும் பொருள் வாயிலாக அவனை வழிபடுதல் வேண்டுமென்னும் மனவொருமையும், அவ்விக்கிரக வழி பாட்டினின்றியமையாமைக் கடப்பாடும் இயற்கையிலேயே அமைந்து கிடக்குமுண்மை ஒரு சிறிது காட்டி ஈசுரனை உருவத்திருமேனியிற் கொண்டு உபாசிக்கு முறையேதான்

பொருத்தமாமென்றுவலியுறுப்பாம்.

நாகரிக விருத்தியடையு ராதாதமாக்களெல்லாம் தமக்குந் தம்மைச் சார்ந்தார்க்கும் அச்சம், துக்கம், சுகம் முதலியன நிகழ்தற்கேதுவாகப் புறத்தே தோன்றும் உலகியற் பொருள் களையெல்லாங் கடவுளாகக் கொண்டு வழிபாடு இயற்றி வருகின்றார். ஆகவே, தமக்கு உறுதுயர் நீக்கி நலம்பயப்பதாக அவர் தாங்கருதிய புறப்பொருளையே ஈசுரதானத்தில் வைத்து உபாசிக்கக் காண்டலாலே, அவர்தங் கருத்துவகையால் அவையும் ஈசுரோபாசனையாய் முடிந் திடுதற்கு ஓரிழுக் கில்லை. நாம் சுதந்திரரல்லோம் நம்மினும் வல்லதான பிறிதோர் பொருளையே சார்ந்து நிற்கும் பரதந்திர முடையோமென்னும் உணர்ச்சி நிகழப் பெற்றுச் செய்யும் வழிபாடெல்லாம் எத்துணை யிழிந்தன வாயினும்அவ்வவர் பக்குவ வேறுபாட்டால் அவையும் பொருத்த முடையனவே யாம். அது பற்றி அவை எள்ளற் எள்ளற் பாலனவல்ல. மற்று அவ்வுணர்ச்சியின் அருமைப்பாடும் அது முறைமுறையே முதிருமாறும் உலகமியாங்கணும் அஃதொன்று தானே வேறு வேறாய் நிகழுமாறும் பிறவும் நன்றாராய்ந்து கோடல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/157&oldid=1574573" இலிருந்து மீள்விக்கப்பட்டது