உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவஞானிகளுக்கு

ஞானசாகரம்

133

சமயப்பொருட்பொதுமையுணரும் வேட்கை யுடையரான ன்றியமையாத த கடமையாம். இங்ஙனம் அநாகரிக மிகவுை யரான சிலமக்களின் சமயநிலையும் பிறவும் ஒருசிறிது காட்டிப் பின் அவர் செய்யும் விக்கிரகாராதனையை எடுத்து விதந்து தருக்கிப்பாம்.

ஆஸ்திரேலியாக் கண்டத்திலிருக்கு மாக்கள் உலக சிருட்டி, உலகவியற்கை, சமயவியல்பு முதலியவற்றை உணரு முணர்ச்சியில் ஏனை யெல்லாரினுங் கடைப்பட்ட வராவர். அவர்க்குச் சிருட்டி கர்த்தா ஒருவனுளன் என்னும் அறிவு ன்றாம். ஆயினுந்தீங்கு செய்யும் பேய்களுள வென்றும் அவை இரவிலே காணப்படுமென்றும் உரையா நிற்பர். அவற்றால் நோய்வந்தவிடத்து மந்திரவாதிகளை அழைத்து அவராற் சடங்குகள் பலவியற்றி அதனைக் கழிப்பிக்கின்றார். அம்மந்திரவாதிகள் தெய்வீகத் தன்மை கைவந்தோரெனவும், அது தம்முன்னோர் வழிவருகின்ற தெனவும், அவர்தாமே ஆகாயத்தின் கண் இயங்கல் கூடுமெனவும், காற்று மழை இடி மின்னல் முதலாயின வெல்லாந் தம் ஆணைவழி நிற்பனவா மென்றுங் கூறாநிற்பர். இவ்வாஸ்திரேலிய நாட்டார் கனவில் நிகழ்வனவெல்லாம் உண்மை யாமென்றும், தாமுறங்குங் காலத்தே தஞ்சீவன் புறம்புபோய் மற்றைச் சீவர்களைச் காணுமென்றும், சில உலகியற் பொருள்கள் தாமே உற்பத்தியாய் அவ்வாறான அச்சில ஏனையவற்றை உண்டுபண்ணுகின்றன வென்றும், மேகங்களிடையே

வசிக்கின்ற தந்தை ஒருவன் அவன் மூன்று குமாரர்களுடை யான் அவன் எல்லாவற்றையும் படைக் கின்றானென்றும், ருபெரும்பாம்பு எல்லாவற்றிற்குங் காரணமா மென்றும், சூரியன் சந்திரன் நட்சத்திரங் களெல்லாம் ஒரு காலத்து ப்பூமியில் வசித்த உயிர்ப் பொருன்களே யாமென்றும் உரைக்கின்றார். சடிதியில் நிகழும் மரணங்களெல்லாம் தமக்குப்பகைவராயினார் செய்யுஞ் சூனியத்தால் வருகின்றன வென்று கொண்டு அங்ஙனஞ் செய்தோரைத் தெரிந்து கால்கின்றார்; அவர் அவரைத் தெரியுமாறு இறந்தவன் புதைகுழியைச் சுற்றிய நிலத்தை வட்டமாய்ச் சமன்செய்து வழுவழுப்பாக்கி வைத்துப்போவர். மற்றைநாள் வந்து காணும்போது யாதேனும் ஒருபிராணியின் அடிச்சுவடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/158&oldid=1574574" இலிருந்து மீள்விக்கப்பட்டது