உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

மறைமலையம் -8

8

ஆண்டுக்காணப் படுமாயின், அச்சுவடுகிடந்த திசை நோக்கி யிறந்தவனுக்கு உரிமைச்சுற்றத்தான் ஒருவன் சென்று அங்குள்ளாரோடு உறவாடி, அவர்க்குத்தான் கொடுக்கும் உணவை அவர் உண்ணுகின்றகாலையில் எவன் இருமுகின்றானோ அவனே கொன்றவ னெனத் தெரிந்து அவனைப் பழிக்குப்பழிவாங்கித் திரும்புவான். அவர்கள் ஒருவன் இறந்த பின் வெண்ணிற மடை கின்றான் என்கின்றார்கள். அவர்களில் ஒருசிலர் பிணத்தை நிலத்திற் புதைக்கின்றார், ஒருசிலர் மரத்தின் மேலதனை வைக்கின்றார், ஒருசிலர் எரித்து விடுகின்றார். அவர்கள் துக்கங்கொண்டாடு மிடத்து வெண்ணிறமுள்ள களிமண்ணை உடம்பெங்கும்

பூசிக்கொள்ளுகின்றார். இறந்தவர் தகுதிக்கேற்பப்பாட்டுக்கள் பாடுகின்றார். இறந்தவர் ஆன்மா உயிரோடிருப்பவர் தேகத்திற் புகுதுகின்ற தெனவும், அது வானுலகிற் சென்று மண்ணுலகைக் காணுமெனவும் பிறவு முரைப்பர்.

இனித் தாஸ்மானியா நாட்டிலுள்ளோர் மறுமை உண்டென்றும், தாமிம்மையிற் பெறநினைந்தவெல்லாம் அம்மறுமையிற் பெற்றுக் கழிபேரின்பநுகர்தற்கா மென்றுங் கூறுவர். அவருட் சிலர் தாமிறந்தபின் நட்சத்திர மண்டலஞ் சல்வதாமெனவும், சிலர் தம்பூர்வீகர் இருக்கும் தீவொன்றிற் செல்வதாமெனவும், ஆண்டு வெண்ணிற முடையராய் மாறுதல் சித்திக்கு மெனவுங் கூறுவர். அவர்கள், குகையினுங் காட்டினுந் தீங்கு செய்யும் பேய்கள் உளவென நம்புத லுடையர். அவர்கள் இரவில் இயங்கார். இறந்தவர் புதை குழியைச் சுற்றிச் சமாதி எழுப்புவர். அல்லது, இறந்தவர் தம் உறக்கத்திற் போரியற்ற ஓர் வல்லையம் வைப்பர். இறந்தவர் மனைவியார் தலையைச் சிரைத்துக் களிமண் அப்பிக் காழுப்பையுங் கரியையுங் குழைத்து முகத்திற்பூசிக் கூர்ங் கற்களால் உடம்பைக் கிழித்துக் கொண்டு அழுவர்; புதை குழியிற் பூவும் பெண்களின் சிரைத்தமயிரும் எறிகின்றார்கள். இறந்தவர் எலும்புகள் சிலவற்றை மூட்டையாகக்கட்டிக் கழுத்தில் தொங்கவிட்டுக் கொள்வார்கள். தஞ்சினே கரினிறந்தவுயிர் தம்மை வருத்தவும் வருமென நம்புதலு

டையர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/159&oldid=1574575" இலிருந்து மீள்விக்கப்பட்டது