உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

ஞானசாகரம்

தலைவனாயிருப்போன்,

135

இனிப் புதுக்காலி டோனியா தேசத்திலிருக்கும் மக்கள் முன்னையோரினுஞ் சிறிது சமயவுணர்ச்சி மிகப் பெற்றுடைய ராவர். அவர்கள், இறந்தொழிந்த தம் முன்னோரை ஒரு விதமான தெய்வமெனக் கொண்டு பராவுகின்றார்கள். அவர்களில் இறந்தோரைத் தெய்வமாக வழுத்துங் காலங்களிற் குருத்துவம் மேற்கொண்டு அன்புள்ள தந்தையே! உனக்காக இங்கே சிறிதுணவு வைக்கப்பட்டிருக்கின்றது; அதனை உண்டு அதன் பொருட்டாக எம்மீது அன்புகூர்ந்திடுக" என்று பிரார்த்திக் கின்றான். இச்சடங்கு செய்து கழிந்ததும் விருந்தியற்றலுங் கூத்தாடுதலுமுண்டு. சீவன் தேகத்தை விட்டுப்பிரிந்ததும் அது தீவின் றெற்குமுனைசென்று கடலிற் குளித்து நீந்திச் சீவர்கள் கூடியிருக்கும் உமத்மஸ் என்னு மிடத்திற்குச்செல்லுகின்ற தென்றும், ஆண்டுச் செல்லலும் அங்கு நல்வர்கட்கென்றுந் தீயவர்கட்கென்றும் இரண்டாகப் பகுக்கப்பட்ட இடங்களி லொன்றிற் செல்கின்ற தென்றுங் கூறுகின்றார். முத்தியுல கென்பது அபரிமிதமான செழுஞ்சுவை யுணவு தொகுக்கப்பட் டிருக்குமிடமா மென்றுங் கூறு கின்றார். ஐந்து மாதத்திற்கு ஒருதரம் இரவில் இறந் தோர்க்குத் திவசஞ் செய்கின்றார்கள். அப்போது குவியல் குவியலாக உணவு சேகரிக்கின்றார்கள். கிழவருங் கிழவியரும் மலைக்குகைகளில் ஒளிந்து கொண்டு, புறத்தேதிவசஞ் செய்து ஆரவாரிக்கும் இளைஞருக்கு இறந்தோர் ஆவிகள் போலத்தம்மைக்காட்டி அவர்க்கு நம்பகம் வருவிக்கின்றார். ஈசுரனை உபாசிக்குஞ் காலையில் பகைவரெறியும் வல்லையங்களைத் தாம் இனிதுகாணும் பொருட்டுக் கண்ணுக்கு ஒர் கடவுளையும், பகைவர் வருஞ் சத்தத்தைத் தெரிந்து கொள்ளும் பொருட்டுக் காதுக்கு ஓர் கடவுளையும் வழுத்துகின்றார். புதுக் காலிடோனியா தேசத்திலுள்ள தன்னா எனும் ஊரில் விக்கிரகங்களில்லை யாயினும், சனங்கள் ஆலமரத் தோப்புகளைப் பரிசுத்த முடைய L மாக நினைந்து ஆண்டுத் தூய்மையுள்ள கற்களை நிறுத்தி வணங்குகின்றார்கள். மாலிகோலா புது ஈபிரீட்ஸ் என்னு மூர்களில் ஒவ்வொரு சிறுகிராமத்தினும் பரிசுத்தமான வீடுகளில் வண்ணந்தீட்டி ஆடவரைப்போல் உடையிட்ட பதுமைகள் மூன்று நான்கு நிறுத்தி வழிபாடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/160&oldid=1574576" இலிருந்து மீள்விக்கப்பட்டது