உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136

மறைமலையம் லயம் – 8

L

செய்கின்றார். எல்லாத் தய்வங்களுந் தீதுசெய்யுந் தன்மையுடையன வென்கின்றார். மந்திரமுஞ் சூனியமும் எல்லாராலும் நம்பப்படுகின்றன. அவர்களில் தலைவோன் இறந்து பட்டால் அவன் புதைகுழியின்மேல் கணை வல்லையம், மண்வெட்டி முதலியவற்றைச் செங்குத்தாய் நிறுத்தி அலங்கரித்து வைக்கின்றார். பிணத்தின் கைவிரல் கால்விரல்களை ஞாபகார்த்தமாக நறுக்கிக் கொண்டு போய்ப் போற்றிவைப்பர். புதைகுழியிற் பாய்விரித்து அதிற்பிணத்தைக் கிடத்தித் தலைதவிர மற்றை யுறுப்புக் களைப் புதைத்து விடுகின்றார்; பத்துநாட்கழிய இறந்தோன் சினேகிதர் சிலர் போந்து தலையைத் திருகிக்கொண்டு போய்ப் போற்றிவைக்கின்றார்; சிலர் பற்களைப் பிடுங்கிக் கொண்டுபோய் அவ்வாறு செய்கின்றார்; மண்டை

ஓட்டையும் அங்ஙனஞ் செய்தலுண்டு.

இனிச்

சாலமன் தீவுகளிலுள்ளோர் இறந்தோர் ஆன்மாக்களையே பெரிதெடுத்துப் போற்றி வழிபடுகின்றார். முக்கியமாய் மூதாதைக்கு முன்சென்றோரை அங்ஙனம் வழிபடுதலில்லை. நொதுமலர் இறந்துபட்டால் அவர் அருகேயுள்ள ஓர் தீவில் ஓர் குறிப்புமின்றி அலைந்து காண்டிருப்பரெனவும், சிறந்தோர் இறந்துபட்டால் அவர் தம் நண்பர்பக்கத்தே யிருந்துகொண்டு அவர் வேண்டிய போதெல்லா நன்மை செய்வரெனவுஞ் கூறாநிற்பர். தந்தை மகற்குரைப்ப வருகின்ற உபாசனைப்பண்களை முணுமுணு வென்று சொல்வர். மந்திர சூனியங்களை நம்புகின்றார். சுறாமீன் அவராற் பெரிதுங் கௌரவிக்கப்படுகின்றது. மரங் குடைந்து செய்த வீடுகளைப் பரிசுத்தமுடைய இடமாக வண்ணி அங்கு மரங்களில் ஈர்ந்து செய்த பேய்வடிவங் களைத் தாபித்து வழிபடுகின்றார்.

என்

னு

னிப்புதுச் சீலண்டு தேசத்தில் மாரிஸ் மூரிலுள்ளோர் ஓர் கூடையில் வேர்களையிட்டு உயரத்தூக்கி அஃது ஈசுரவுணவாமென்று, அது நல்லதானிய விளைவைக் காடுக்கு மென்றுங் கூறுகின்றார். அவர்களில், தலைமக்கள் தைவிகமுடை மையால் தேவர்கள் கருத்தைத் தமக்கு வெளியிடுவரெனச் சொல்வர். ஐரோப்பிய பாதிரியா ரொருவர் இத்தீவுக்குச் சென்று அங்கு அவர்களிற்றலைவ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/161&oldid=1574577" இலிருந்து மீள்விக்கப்பட்டது