உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

66

137

னான குருவைக்கண்டு பேசுகையில், அவன் என்னை மனிதனென்று நினையற்க, நானிம்மண்ணுலகிற் பிறந்

தேனல்லேன், நான் வானுலகினின்று வருகின்றேன்,

என்முன்னோரெல்லாரும் ஆண்டுள்ளார், அவர்கள் தேவர், நான்திரும்பவும் அவர்களிடத்துச் செல்வேன்” என்றுரைத் தனனாம். மாய் என்பவர் அவர்களிற் பூர்வீகப் பெரியோராம்; அப்பெரியவர் தாமிருக்குந் தீவைக் கடலிலிருந்து தூண்டிலா னிழுத்து விட்டனராம். தெய்வத்தன்மை யடைந்ததம் முன்னோர் ஆன்மாக்கள் பல்லிசிலந்தி பறவைகளாக இங்குவருகின்றனவென நம்புகின்றார். மேலும், ரங்கியும் பப்பாவும் அல்லது வானும் மண்ணும் ஆறுபுதல்வரையுந் தந்தையரையும் தந்தனர்; அவை 8, மக்களும் யுத்தமும், பயிரின்றிப்பெறும் உணவும் மீனும் ஊர்வனவும், காற்றும், புயலும், பயிரிடப்படும் உணவும், காடும் பறவையுமாம்; த்தெய்வங்கள் செய்த சதியாலோசனையால் வானும் நிலனும் பிரிந்து போயினவென்று புராணகதையுஞ் சொல்லு கின்றார்கள். தீயகருமங்கள் செய்வோர் இவ்வுலகத்தே ஒறுக்கப்படுகின்றனரெனவும், அங்ஙனம் ஒறுப்போர் தம்முன்னோரா மெனவுங்

தெய்வத்தன்மையுடை கூறுகின்றார்.

இதிந் தங்காத்தீவு களிலுள்ளோர் முன்னையோரினுந் திருந்திய சமயவுணர்ச்சியுடையர். அவர், சிறந்த கடவுளருள ரென்றும், அக்கடவுளர் அவ்வவர் செய்திறங்கட்கேற்பப் புண்ணிய பாவங்களை வகுக்கின்றனரென்றும் கூறுகின்றார். அவர்கள் ஆன்மாவொன்றுண்டென்றும், மக்களெல்லாருந் தேவவுலகத்தி லிருந்து வந்தாரென்றுங் கூறுவர். அவர்கள் கடவுளருக் கெல்லாந் தனித்தனி ஆலயங்களும், தனித்தனி குருமார்களும் உண்டு.

னிச் சாமோன் தீவுகளிலுள்ளோர் எண்ணிறந்த கடவுளரை வழிபடுகின்றார். ஒவ்வொருவரையுங் காப்பாற்று கின்ற தனித்தனி தேவரும், ஒவ்வொருகிராமதேவர்களும் உண்டு. அக்கடவுளர் பெயர்கள் அவர்கள் பாஷையில் விரைந்துசெல்வோம்' ‘தூய்மையுடையோன்’ ‘அழிவு’ ஆகாயக்கடவுள்' என்னும்பொருள் தருகின்றன. அத் தேவர்கள் மிருகங்களாகவும் வானவில்லாகவு ம்

எரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/162&oldid=1574578" இலிருந்து மீள்விக்கப்பட்டது