உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138

❖ LDMMLDMOED - 8

மறைமலையம் லயம் –

மீன்களாகவும் வருகின்றன ரெனநம்புகின்றார். கல்லாற் செய்த மழைக்கடவுளை வணங்குகின்றார், மழை மிகுந்து விட்டால் அக்கற்பதுமையை நெருப்பில் வீழ்த்தி வறட்டுவார்கள், மழையில்லாவிடின் அதனையெடுத்து நீரில் நனைப்பார்கள்.

வலப்

இனி எர்வீத் தீவுகளிலுள்ளமக்கள் இவ்வுலகந் தேங்காயோடு போலிருப்பதெனவும், அதனத்துக்கு மேல்திறப்பில் தாம் வசிப்பதாகவும், அதன் அடிப்படையில் தடித்த தண்டுண்டென்றும், அது பெரியதோர் பேய் என்றும், அஃதிருக்கும் இடத்திற்குச் சிறிதுமேலே ‘உயிர்’ என்னும் மற்றோர் பெரும்பேய் உளதென்றும், அதற்கு மேலே நெடுநாள் வசிப்போன்’ எனுந்தடிப்பேய் பிறிதொன்றுண் டென்றும், இம்மூன்று பேய்களுமே உலகைத் தாங்குகின்றன வென்றும், இந்தத் தேங்காய் நடுவில் பெண் பேய் ஒன்றிருக்கின்ற தென்றும், அது படைத்தற் றொழிலை நிகழ்த்துகின்ற தென்றும் உரைக் கின்றார். ஒருநாள் அப்பெண் பேய் தன்வலது விலாவெலும்பு களிலொன்றைப் பிடுங்கி யெடுத்து அதனை மனிதனாகப் பிரதமசிருட்டி செய்தனள். இன்னுமிவள் இ L பக்கங்களிலிருந்து எல்லாவற்றையும் படைத்தனள். இவர்கள் கூறும் புராணக்கதைகளெல்லாம் கிரேக்கர் கூறுவனவற்றொடு ஒத்தொழுகுகின்றன. பறவைகளும் மீன்களும் ஊர்வனவும் பூச்சிகளும் குருமாரும் முதலியன தேவாவதாரங்களாகவும் தேவதூதர்களாகவுங் கருதப் பட்டன. அவர்கடவுளை 'ஐயோ’ என்று அழைக்கின்றார். அச்சொற்பொருள் மரத்தின் உள்ளீடு என்பதாம். மரத்தினுள்ளகடுபோல் மனிதனோடியைந்து நிற்றலாற் கடவுளை அவ்வாறு வழங்குகின்றார். நாணற்புல் வேய்ந்த குடிலினுட் புகுந்தால் மேளத்தினோடுபோன்ற உருவத்துடன் ரங்கோ எனும் வடிவம் நிற்கும்; அதனை யடுத்து மேட்டரோ என்பதன் வடிவமிருக்கும்; அதனை யடுத்துப் பதினொரு பதுமைகளிருக்கும். இவர்கள் நன்றாய்க் கடைந்து திரட்டிய பதுமைகளை வழிபடுதற்கு இயற்றிக் கொண்டார்கள். இன்னுமிச்சாதியார் செய்யுஞ் சவக்கருமங் களும் பிறவும் ஈண்டு விரிப்பிற் பெருகும்; விரிந்த நூல்களிற் கண்டு கொள்க; ஆயினும் அவர்கள் முற்காலங்களில் மனிதரைப் பலியிட்டு வந்தார்களென்பது மாத்திரம் ஈண்டுக் குறிக்கொளல் வேண்டும்.

ள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/163&oldid=1574579" இலிருந்து மீள்விக்கப்பட்டது