உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

139

இனிச் சொசைடித் தீவுகளிலுள்ளோர் அனேக தெய்வங் களை உபாசித்து வருகின்றனர். அவைகளிற் சில போர்க் கடவுள் சமாதானக் கடவுளாகவும், ஏனைச் சில மக்கட்குந் தேவர்கட்கும் இடைநின்று தூதுபோவன வாகவும், மற்றுஞ் சில ஆரோக்கியந் தருவனவாகவுஞ் கொண்டு வழுத்தப் படுகின்றன. பலவேறு வகைப்பட நிகழ்த்தும் விளையாட்டுகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வோர் கடவுளுண்டென்று கருதி அவ்விளையாட்டுகள் தொடங் குங்காலும் நிறுத்துங்காலும் அவற்றைப் பூசிக்கின்றார். அதற்கென்றே நியமிக்கப்பட்ட ஓர் தெய்வத்தின் ஆணைவழி நின்று பூகம்பங்களுண்டா கின்றனவென்று முரையா நிற்பர். மீன்களும் பறவைகளுங் கூட இவர்களாற் றெய்வங்க ளென்று கொள்ளப்படுகின்றன. ஆமை மிகப் பரிசுத்த முடைய தென்றெடுத்து ஆலயத்தினுள் அக்நியிலதனைச் சமைத்து அதனில் ஒரு கூறு விக்கிரகத்திற்கு நிவேதிக் கின்றார்கள். தம்மிற் றலைவோருங்குருமாரும் இறந் தொழியின் அவர் ஆன்மாக்கள் சில வேறுபாட்டுடன் அவர்களால் வழுத்தப்படுகின்றன. பிரசித்தியடைந்த வாருவரான்மாவுக் ம் கு வ்வொருவிக்கிரகங்கள்

ஒவ்

பூ

நிலத்தின் மேலுயர்த்திக் கட்டப்பட்ட வீடுகளில் அமைக்கப் படுகின்றன. அவர்கள் மறுமையுண்டென்றும், அக்காலத்து ஓரான்மாவனது மற்றையான்மாக்களாற் செலுத்தப்பட்டு இருளிற் செல்லுகின்றதென்றும், ஆண்டது முறைமுறையே தேவர்களால் உண்ணப்படுகின்றதென்றும், அங்ஙனம் உண்ணப்படாதொழிந்தசில அத்தேவர்களைப் போற்றெய்வத்

தன்மையுடைய வாகின்றனவென்றுங் கூறுகின்றார். ஒரு மலைக்குப் பக்கத்தே மிகவழகிதான ஓர் முத்தியுலகுண் டன்று ன்று நினைக்கின்றார். ஆயினும், இவ்வுலகு நல்லோரான் மாத்திரம் பெறப்படுவதெனவாதல், இவ்வுலகத் தின்கணியற்றிய கருமங்களின் பயனை மற்றையுலகில் நுகரவேண்டு மெனவாதல் அவர் கொள்வதில்லை. ஒரு விக்கிரகந் தமக் கான்று செய்யுமாறு வேண்டித் தாஞ்செய்யும் பூசனைகட் கேற்பத் தாம்விரும்பியது பெறப்படாதாயின், அவர் அவ்விக்கிரகத்தினை வீசியெறிந்து அவ்விடத்தில் தாம் வேண்டுவதொன்றை நிறுத்துவர். இன்னும் இவர் ஒழுக்கங் கள் விரிப்பிற் பெருகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/164&oldid=1574580" இலிருந்து மீள்விக்கப்பட்டது